வரலாற்றில் இன்று


24/07/1148- பிரெஞ்சு மன்னர் ஏழாம் லூயி டமாஸ்கஸ் நகரை          முற்றுகையிட்டார்.

24/07/1206- குத்புதீன் இந்தியாவின் மன்னராக லாகூரில் முடிசூடிக் கொண்டார் .
24/07/1487- நெதர்லாந்து, லீயு வார்டன் நகர மக்கள் வெளிநாட்டு பீர் இறக்குமதியை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்தனர்.

24/07/1567- ஸ்காட்லாந்தின் அரசி முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப் பட்டாள். அவளது ஒரு வயது மகன் மன்னன் ஆக்கப் பட்டான்.

24/07/1704- டச்சுக் காரர்களோடு மூன்று நாட்கள் நடந்த கடற்போரில் புகழ் பெற்ற ஜிப்ராடல் ஜலசந்தியை பிரிட்டன் படைக் கைப்பற்றியது.

24/07/1837- கவர்னர் ஜெனரல் கல்கத்தாவில் தபால் சட்டத்தை அறிவித்தார்.
24/07/1851- பிரிட்டனில் ஜன்னல் வரி ஒழிக்கப்பட்டது.


24/07/1901- வங்கி ஒன்றில் திருடுபோன குற்றச்சாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த  ஹென்றி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

24/07/1911- பெருவில் , மச்சு பிச்சு என்ற பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை  அமெரிக்க நாடுகாண் பயணி
ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்.  இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.

24/07/1915- சிகாகோ ஆற்றில் ஈஸ்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 844 பேர் உயிரிழந்தனர்.

24/07/1918- ஜெருசலேத்தில் ஹீப்ரு பல்கலைக் கழகத்திற்கு டாக்டர்   வெய்ஸ்மான் அடிக்கல் நாட்டினார்.

1918- அமெரிக்காவில் வாரத்திற்கு நான்கு நாட்கள் இரவில் விளக்கு எரிக்கக் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

1918- அமெரிக்காவிலிருந்து ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட கடிதங்கள் அனுப்புவது தடை செய்யப்பட்டது.

24/07/1921- அமெரிக்கா ஆஸ்திரியாவுடன் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

24/07/1924- பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.

24/07/1925- லண்டனில் கைஸ் மருத்துவமனையில் முதன் முதலாக 6 வயது சிறுமிக்கு இன்சுலின் சிகிச்சை வெற்றிகரமாக கொடுக்கப்பட்டது.

24/07/1931-  பென்சில்வேனியா வில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.

24/07/1932-  ராமகிருஷ்ணா மிஷன் சேவா  பிரதிஸ்தான் நிறுவப்பட்டது .

24/07/1943- இரண்டாம் உலகப் போர்: பிரிட்டனும், அமெரிக்காவும் ஜெர்மனி மீது கடுமையான விமானத் தாக்குதலை துவக்கின. நவம்பர் இறுதி வரை இடம்பெற்ற தாக்குதலில் 30 ஆயிரம் பர் கொல்லப்பட்டனர். இரண்டு லட்சத்து 80 ஆயிரம் கட்டிடங்கள் அழிந்தன.

24/07/1959- மாஸ்கோவில் அமெரிக்க தேசியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது .

24/07/1969- விண்வெளி வீரர்களுடன் நிலவில் இறங்கிய அப்பலோ 11 விண்கலம் 22 கிலோ நிலா மண்ணுடன் பசிபிக் கடல் அருகே இறங்கியது .

24/07/1977- லிபியாவுக்கும், எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற நான்கு நாள் போர் முடிவுக்கு வந்தது .

24/07/1982 -ஜப்பான், நாகசாகியில் பெரும் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் 299 பேர் உயிரிழந்தனர்.

24/07/1983- இலங்கையில் தமிழருக்கு எதிரான கருப்பு ஜூலை கலவரங்கள் இரண்டாம் நாளாக தொடர்ந்தது.ஈழப் போரின் தொடக்கமாக இது கருதப்படுகிறது.

24/07/1991-இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.

24/07/2001- கொழும்புவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.

24/07/2007- லிபியாவில் 400-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் வி கிருமியை பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரிய நர்சுகளையும், பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது .

24/07/2013- ஸ்பெயினில் விரைவு ரயில் ஒன்று தடம் புரண்டதில் 78 பயணிகள் உயிரிழந்தனர்.

24/07/2014 -ஏர் அல்ஜீரிய விமானம் மாலியில்  விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 116 பேரும்  உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments