கணுக்காலிலுள்ள வலிகளை போக்கிட சிறந்த வழிமுறை (உணவே மருந்து)



பிரண்டையை சிறுதுண்டுகளாக வெட்டி நீர்விட்டு அரைத்து கைகளில் படாமல் பாதுகாப்பாக வடித்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள் அதேபோல் புளியை கரைத்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு குவளை 🍵 பிரண்டை சாறு.
ஒரு குவளை 🍵புளிக்கரைசல்.

  • இரண்டையும் ஒன்றாக கலந்து சிறிது உப்பு சேர்த்து அடுப்பிலேற்றி 10-15நிமிடம் மிதமான தீயில் காய்ச்சி இறக்கி

  • மிதமான சூட்டில் கணுக்காலில் தடவினால் இரத்தக்கட்டு வீக்கம் பலகீனம் அனைத்தும் தீர்ந்திடும் 

  • மேலும் முதுகுத்தண்டு தோல்பட்டை இணைப்பு கை கால் மூட்டுகள் அடிபட்ட வீக்கங்கள் இரத்தக்கட்டுகள், சுலுக்கு, மூட்டு விலகள் என உடலில் வலியுள்ள பகுதிகளில் தடவிவிட்டு ஒரிரு மணிநேரம் கழித்து நீரில் கழுவிடுங்கள்


  • தேவையெனில் இரவில் தடவிக்கொண்டு படுத்துறங்கி காலையில் எழுந்து கழுவிடலாம்.

  • இம்முறையில் இரத்தக்கட்டுகள் பலகீனமான நரம்புகள்தேய்ந்த எலும்பு சவ்வுப்படலம் உடைந்த எலும்பு என அனைத்தும் பலப்படும்.

  • தாம் தயாரிக்கும் பிரண்டை கரைசலை தாம் பயன்படுத்திவிட்டு மீதமுள்ளதை அப்படியே வைத்து மறுநாளும் பயன்படுத்தலாம். 

  • இந்த கலவை அவ்வளவு சீக்கிரம் கெட்டுப்போகாது, மேலும் தாம் விரும்பினால் குளிர்சாதன பெட்டியல் வைத்துவிட்டு நாள்தோறும் தேவைக்கேற்ப எடுத்து  சூடுபடுத்தி பயன்படுத்திடலாம்

  • அனைத்துவகை எலும்புமண்டலம் தசை மற்றும் நரம்புமண்டலம் பாதிப்புகளுக்கும் மிகச்சிறந்த பலனை விரைவாக தந்திடும்.


முறையாக பயன்படுத்தி பலனடைந்திடுங்கள் நலநிறைவுண்டாகட்டும்.


Post a Comment

0 Comments