கை, கால்கள்,முதுகு, வலிகளுக்கான சிறந்த இயற்கை ஊட்டம் சொல்லும் சித்த மருத்துவம்





  • முடக்கற்றான் கீரை சாறம்
  • முருங்கைக்கீரை சாறம்

முருங்கைக்கீரை அல்லது முடக்கற்றான் கீரையை வாங்கிவந்து நீர்விட்டு அலசி, கீரைகளை காம்புடன் சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீர்விட்டு வெட்டிய கீரைகளை சேர்த்துக்கொண்டு அதனுடன் ஒருதுண்டு இலவங்கப்பட்டை ஒரு தேக்கரண்டி சீரகம் , 4பல் பூண்டு, ¼மஞ்சள் பொடி. இவற்றை ஒன்றாக கலந்து அடுப்பிலேற்றி நன்றாக கொதிக்கவைத்து நீர் பாதியானதும் இறக்கி காலை மாலை இருவேளையும் 200-250மில்லியளவு  வடித்து பருகிடுங்கள்.

இதனை தொடர்ந்து பருகினால் கை,கால் மூட்டுவலி, முதுகுவலிகள்,சுவாசப்பிணிகள், இரத்தழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உடல்சோர்வு என அனைத்தும் படிப்படியாக நீங்கிடும் உடல் உயிர்ப்புடன் நிலைபெறும்.

முருங்கைக்கீரை, முடக்கற்றான் கீரை இரண்டுமே எளிதில் கிடைக்கக்கூடிய வீரியமுள்ள காட்டுப்பயிர்களாகும், தொடர்ந்து பயன்படுத்தி பலமடைந்திடுங்கள்  நலநிறைவுண்டாகட்டும்.

மேலே பதிவிட்டுள்ள முறைமையை கடைபிடித்தாலே உடற்சோர்வு முதுகுவலிகள் கைகால் வலிகள் சுவாசப்பிணிகள் என அனைத்தும் கட்டுப்பட்டு உடல் உறுதியடைந்திடும் .

Post a Comment

0 Comments