வரலாற்றில் இன்று - 06/08/2019





வரலாற்றில்  இன்று 
06/08/2019- செவ்வாய் 


06/08/1825- பொலிவியா  ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

06/08/1837 -லண்டனில்
செர்பன்டைன் எனும் இடத்தில் முதன் முதல் "நீச்சல் போட்டி" நடைபெற்றது .

06/08/1841-ராணி விக்டோரியாவிற்கு ஆல்பிரட் பிறந்த செய்தி தந்தி மூலம்
"த டைம்ஸ் " பத்திரிகைக்கு அனுப்பப்பட்டது .
பிரிட்டனில் தந்தி மூலம் அனுப்பப்பட்ட முதல் செய்தி இதுதான் .

06/08/1906 -அரவிந்த கோஷ் "வந்தே மாதரம் "எனும் பத்திரிகையை துவக்கினார்.

06/08/1914- முதலாம் உலகப் போர் : செர்பியா ஜெர்மனி மீதும், ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.

06/08/1924 -பிரிட்டனுக்கும் ரஷ்யாவிற்கும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது.

06/08/1930 -"வீரகேசரி" நாளிதழ் சுப்ரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்புவில் தொடங்கப்பட்டது.

06/08/1944- வார்சாவில் ஜெர்மனிக்கு எதிராக ஆகஸ்ட் ஒன்றில் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது .

06/08/1945- இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா லிட்டில் பாய்  எனும் அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். மேலும்
பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில்
இறந்தனர்.

06/08/1952- இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனை நகருக்கு மாறியது.

06/08/1960 -கியூபா மீது பொருளாதார தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது .

06/08/1962 - 307 ஆண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து ஜமைக்கா விடுதலை பெற்றது.

06/08/1964 -அமெரிக்கா, நெவாடா மாநிலத்தில் உலகின் 4,900 ஆண்டு பழமையான மரம்  வெட்டப்பட்டது .

06/08/1986 -இந்தியாவில் முதல் முதலாக டாக்டர் இந்திரா ஹிந்துஜா என்பவரின் முயற்சியால் மும்பை மருத்துவமனையில் மணி - சியாம்ஜீ சவ்தா என்ற தம்பதிகளுக்கு பரிசோதனைக்  குழாய் முறையில் பெண் குழந்தை பிறந்தது.

06/08/1988-பீகார் , கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 400 பேர் உயிரிழந்தனர் .

06/08/1990 -இலங்கை அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி எனும் இடத்தில் பெண்கள் முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.

1990- பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் பூட்டோ பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

06/08/1991- கர்நாடக முன்னாள் முதல்வரும், ஜனதா தள தலைவருமான ராமகிருஷ்ணன் M.L.A. பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

06/08/1997- வடகொரிய போயிங் விமானம் ஒன்று  மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர் .

06/08/2001 -ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர் .

06/08/2010- ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 71  நகரங்கள் பாதிப்படைந்தன. 255 பேர் உயிரிழந்தனர் .

06/08/2011- ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில் 30 அமெரிக்க ராணுவத்தினர் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments