முடி உதிர்வதை தடுக்கும் சித்த மருத்துவ வழிமுறைகள் (உணவே மருந்து)




முடி உதிர்வதற்கான காரணங்கள்
  • உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.
  • உடலில் நீர்ச்சத்து குறையும் சூழலில் உடலில் கழிவெப்பமானது மிதமிஞ்சி அதிகரிக்கும் சூழலில்
  • நரம்புமண்டலம் தோல்மண்டலம் இரண்டுமே தளர்ந்துபோகும்தோல் மண்டலத்திலுள்ள வியர்வை சுரப்பிகள் சிறைபடும் இதனால் முடியின் வேர்க்கால்கள் வலுவிழந்து கொட்ட துவங்குகிறது.
  • மொட்டை அடித்தவர்களுக்கும் வழுக்கை விழுந்தவர்களுக்கும் தோலில் வியர்வை சுரப்பிகள் மழுங்கி மூடியிருப்பதை காணலாம் , இதற்காக வகை வகையான எண்ணெய்களை தடவுவது எப்பயனும் தராது.
  • இயற்கையான முறையில் பழங்கள் கீரைகள் காய்கறிகள் போன்றவற்றில் குளிர்ச்சியும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ள ஊட்டங்களை கொண்டே தாம் தமது உடலை குளிர்விக்க வேண்டும் அதுவே ஒட்டுமொத்த உடலுக்கும் சிறந்த ஊக்கமாகும்

தற்காலிக தீர்வினை முயற்சித்து பயனடைந்திடுங்கள் :

  • உமத்தை காயை பறித்துவந்து தரையில் தமது உமிழ்நீரைவிட்டு அதில் ஊமத்தை காயினை உரசினல் கிடைக்கும் விழுதினை முடிகொட்டும் பகுதிகளில் தடவிக்கொள்ளுங்கள் .
  • ஊமத்தை குளிர்ச்சியும் விஷகுணமும் உள்ளது அது தோல் மண்டலத்திலுள்ள வெப்ப அழற்சியை உடைத்து தோலிலுள்ள துளைகளை திறந்துவிடும். முடி உதிர்வினை படிப்படியாக கட்டுப்படுத்திடும். விஷகுணமுள்ளதால் கவனமாக பயன்படுத்திடுங்கள்.
  • கைகள் வாயில் பட்டால் குமட்டல் வாந்தி உண்டாகும்.
  • இரவு உறங்கும்பொழுது காய்ச்சிய பசும்பாலில் சாதிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி கலந்து பருகினால் உடல் குளிர்வடைந்திடும்.
  • நரம்புமண்டலம் இரத்தணுக்கள் தோல்மண்டலம் அனைத்தும் புத்துயிர்ப்புடன் நிலைபெறும் முறையாக முயற்சித்து முழுமை அடைந்திடுங்கள் நலநிறைவுண்டாகட்டும்.

Post a Comment

0 Comments