வரலாற்றில் இன்று ஆகஸ்ட் - 14


14/08/1040 ஸ்காட்லாந்து மன்னன் முதலாம் டங்கன் , அவரது எதிராளி மக்பெத்துடனான போரில் கொல்லப்பட்டார். மக்பெத் மன்னராக முடி சூடினார்.

14/08/1480- இத்தாலியின் தெற்கே ஒட்ராண்டோ நகரில் இஸ்லாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறிஸ்தவர்கள்  உஸ்மானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

14/08/1592- போக்லாந்து தீவுகளை முதன் முதலாக ஜான் டேவிஸால் என்ற ஆங்கிலேயர் கண்டார்.

14/08/1814 -ஸ்வீடன்- நார்வே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

14/08/1862- ஏழு நீதிபதிகளுடன் 'பம்பாய் உயர் நீதிமன்றம்' துவக்கப்பட்டது .

14/08/1880 -1248 ல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட  கோல்ன் கதீட்ரல்,கோல்ன்  நகரில் கட்டிமுடிக்கப் பட்டது.

14/08/1893 -பாரிஸில் கார் ஓட்டுவதற்கு உரிமம் வழங்க ஆரம்பிக்கபட்டது. காரில் பதிவு எண்ணும், உரிமையாளர் பெயரும் முகவரியும் கொண்ட தகடு பொருத்த வேண்டும் என்ற முறையும் அறிமுகமானது.

14/08/1903- பிரிட்டனில் மோட்டார் கார் சட்டத்தின்படி உரிமம் வழங்க ஆரம்பிக்கபட்டது .

14/08/1908- முதலாவது அழகிப் போட்டி இங்கிலாந்தின்  போக்ஸ்டைன் நகரில் இடம்பெற்றது.

14/08/1916- முதலாம் உலகப் போர்: ருமேனியா, ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை ஆரம்பித்தது.

14/08/1917- ஜெர்மனி மீதும், ஆஸ்திரியா மீதும் சீனா போர் பிரகடனம் செய்தது.

14/08/1936-  அமெரிக்காவில் கடைசி தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

14/08/1937- இரண்டாம் சீனா- ஜப்பான் போர் : ஆறு ஜப்பானின் விமானங்களை சீனா சுட்டு வீழ்த்தியது.

14/08/1945- வியட்நாமின் படைகள் ஆகஸ்ட் புரட்சியை ஆரம்பித்தன .
1945- ஜப்பான் மன்னர் போரை நிறுத்த முடிவு செய்தார் .
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது .

மன்னரின் முடிவை எதிர்த்து ஜப்பான் படைவீரர்கள் அரண்மனை முன் ஆர்ப்பாட்டம் செய்தனர் .
14/08/1947- பாகிஸ்தான் விடுதலை அடைந்தது .முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் கவர்னர் ஜெனரலாக  பதவி ஏற்றார் .

14/08/1972- ஜெர்மனியைச் சேர்ந்த விமானம் கிழக்கு பெர்லின் விமான நிலையத்தில் இருந்து கிளம்பும்போது விபத்துக்குள்ளாகியதில் 156 பேர் உயிரிழந்தனர் .

14/08/1973- கம்போடியா மீது குண்டு வீச்சை அமெரிக்கா நிறுத்தியது.
1973- பாகிஸ்தான் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது .

14/08/1980- போலந்தில் தொழிற்சங்க தலைவர் லேக் வலேசா தலைமையில் வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டது .

14/08/1986- பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ கைது செய்யப்பட்டு 30 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

14/08/1988-  முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்கு பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயர்ந்தவிருதான 'நிஷான் -- பாகிஸ்தான்' விருதினை வழங்கியது.

14/08/1997-எல்லை காந்தி கான் அப்துல் கபார்கானுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது .

14/08/2005- சைப்ரஸில் இருந்து பிராகா நோக்கிச் சென்ற விமானம் கிரேக்கத்தின் மலைகளில் மோதியதில் 121 பேர் உயிரிழந்தனர் .

14/08/2006- முல்லைத்தீவு, செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டனர்.
2006- இஸ்ரேல்- லெபனான் போர் முடிவுக்கு வந்தது .

14/08/2007- ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் இடம்பெற்ற 4 தொடர் குண்டு வெடிப்புகளில் 796 பேர் கொல்லப் பட்டனர்.

14/08/2013- எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகமது முர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களை அடக்க அரசு அவசரகால நிலையை பிறப்பித்தது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

14/08/2015- கியூபாவில் ஹவானா நகரில் 54 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா தனது தூதரகத்தை திறந்தது.

14/08/2018- இத்தாலி,செனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments