வரலாற்றில் இன்று 10/08/2019-சனி



10/08/1519- மெகல்லனின் 5 கப்பல்கள் உலகை சுற்றிவர ஸ்பெயினின் செவீயா நகரில் இருந்து புறப்பட்டன.

10/08/1675- உலகப் புகழ்பெற்ற கிரீன்விச் வான் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அடிக்கல்  நாட்டப் பட்டது .

10/08/1680- நியூ மெக்சிகோவில் கிளர்ச்சி தொடங்கியது.

10/08/1741- குளச்சல் போர் : திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் படைகளை தோற்கடித்தார் .

10/08/1793- லூவ்ரே அருங்காட்சியகம் பாரிஸில் திறந்து வைக்கப் பட்டது.

10/08/1809- ஈக்வடார் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை அடைந்தது .

10/08/1821-மிசௌரி  அமெரிக்காவின் 24 -வது மாநிலமாக இணைந்தது.

10/08/1746- அமெரிக்காவில் ஸ்மித்சோனியன்
இன்ஸ்டிடியூட் நிறுவப்பட்டது.

10/08/1856-லூசியானாவை சூறாவளி தாக்கியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் .

10/08/1886- அமெரிக்காவைச் சேர்ந்த எலிஹூ தாம்ஸம் என்பவர்
வெல்டர் தயாரிப்பதற்கான காப்புரிமம் பெற்றார்.

10/08/1889 -பாட்டில் மேல் மூடி செய்வதற்கான காப்புரிமத்தை  யார்க்ஷையரைச் சேர்ந்த ரைலாண்ட்ஸ் என்பவர் பெற்றார்.

10/08/1893 -டீசல் எஞ்சினின்  முன்மாதிரி ஜெர்மனியில் ஆக்ஸ்பர்க்  தொழிற்சாலையில் வெற்றிகரமாக செயல்பட்டது .

10/08/1904-ரஷ்யா- ஜப்பான் போர் மஞ்சள் கடலில் இடம்பெற்றது.

10/08/1905- ரஷ்யா- ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை அமெரிக்காவின் போர்ட்ஸ்மவுத் நகரில் ஆரம்பமானது .

10/08/1918- சிகாகோவில் போருக்கு எதிராக சதி செய்ததாக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 100 தலைவர்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது .

10/08/1938-மஞ்சூரியாவில் கடுமையான மோதலுக்கு பின் ரஷ்யா - ஜப்பான் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

10/08/1944- இரண்டாம் உலகப் போர் :அமெரிக்கப் படையினர் குவாமில்  நிலைகொண்டிருந்த கடைசி ஜப்பான் படைகளைத் தோற்கடித்தனர்.

10/08/1948- ஜவஹர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.

10/08/1952- நேபாள மன்னராக  திரிபுவன் முடிசூடிக் கொண்டார்.

10/08/1964- ஐ.நா.வின் போர் நிறுத்த
வேண்டுகோளை துருக்கியும், கிரீசும்  ஏற்றுக்கொண்டன.

10/08/1981 -வட அயர்லாந்தில்  பெரும் கலவரம் மூண்டது.

10/08/1989-
ரோகிணி E -1எனும் செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்பட்டது .
இம்முயற்சி தோல்வியடைந்தது.

10/08/1997-  அமெரிக்காவில்  அரசு அலுவலகங்களில் புகைபிடிக்க தடை செய்யப்பட்டது .

10/08/1998 -இமாச்சலப் பிரதேசம்  சம்பா மாவட்டத்தில் கலாபன் கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த 34 பேரை காஷ்மீர் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

10/08/2001- அங்கோலா உள்நாட்டுப் போரின்போது ரயில் தாக்குதல் நடந்து 252 பேர் உயிரிழந்தனர் .

10/08/ 2006- திருகோணமலையின் சேருவிலை பகுதியில் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாக குண்டுகள் வீசியதில் பொதுமக்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

10/08/2009- சிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்க வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

10/08/2014 -டெஹ்ரான் நகரில்  மெஹ்ராபாத் விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்ததில் 40 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments