வரலாற்றில் இன்று 08/08/2019-வியாழன்


வரலாற்றில்  இன்று  08/08/2019-வியாழன்


08/08/1509- கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக முடி சூடினார் .

08/08/1605-  பின்லேந்தின் உலேஸ்போர்க் நகரம் ஸ்வீடனின் நான்காம்
சார்லஸால் நிறுவப்பட்டது .

08/08/1784- முதன்முதலாக லண்டனில் இருந்து பிரிட்டனுக்கு தபால் வண்டி போக்குவரத்து ஆரம்பமானது.

08/08/1848- இலங்கையில் பிரிட்டிஷாருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு  தூக்கிலிடப்பட்டார்.

08/08/1876- தாமஸ் ஆல்வா எடிசன் தனது மைமோகிராபிக்கான காப்புரிமையைப் பெற்றார்.

08/08/1900- அமெரிக்காவில் நடந்த டென்னிஸ் போட்டியில் டேவிஸ் கோப்பை பரிசு அறிமுகம் செய்யப்பட்டது.

08/08/1908- வில்பர் ரைட் தனது முதலாவது பயணத்தை பிரான்சில் லெமான்ஸ் என்ற இடத்தில் மேற்கொண்டார்.

08/08/1916- முதலாம் உலகப் போர்: இத்தாலி கோரிஸியா எனுமிடத்தை ஆஸ்திரியாவிடம் இருந்து கைப்பற்றியது.

08/08/1929- கிராஃப் செப்பலின் என்ற ஜெர்மன் போர்க்கப்பல் உலகை சுற்ற தனது பயணத்தை ஆரம்பித்தது.

08/08/1930- நாக்பூரில் அம்பேத்கர் தலைமையில்  தாழ்த்தப்பட்டோர் மாநாடு ஆரம்பமானது .

08/08/1937-பெயஜிங்கை ஜப்பான் கைப்பற்றியது .

08/08/1942- இந்திய காங்கிரஸ், பம்பாயில் கூட்டிய மாநாட்டில் 'வெள்ளையனே வெளியேறு 'எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

08/08/1943- இந்திய தேசியப் படையின் தலைவராக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்.

08/08/1945- ரஷ்யா ஜப்பான் மீது போர்ப்பிரகடனம் செய்தது .

08/08/1947- பாகிஸ்தானின் தேசிய கொடி அங்கீகாரம் பெற்றது.

08/08/1956- பெல்ஜியத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர் .

08/08/1963- இங்கிலாந்தில் இடம்பெற்ற ரயில் கொள்ளையில் 15 பேர் அடங்கிய கொள்ளையர்கள் , 25 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங்கை  கொள்ளை அடித்தது.

08/08/1964- துருக்கி விமானங்கள் சைப்ரஸைத் தாக்கின.

08/08/1977- எத்தியோப்பியாவின் ஓகாடென் எனும்  எல்லைப்புறப் பகுதியை கைப்பற்ற சோமாலியா படை எடுத்தது .

08/08/1988-  மியான்மரில் மக்களாட்சியை வலியுறுத்தி கிளர்ச்சி நடந்தது.

1988- சீனாவில்  செசியாங் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக நூறு பேர் உயிரிழந்தனர். 80 பேர் காணாமல் போயினர் .

08/08/1990-ஈராக் குவைத்தைக் கைப்பற்றி அதனை  தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது.

08/08/1991- போலந்தில் வார்சா வானொலி தொலைத் தொடர்பு கோபுரம் இடிந்துவிழுந்தது.

08/08/1998- ஆப்கானிஸ்தான் மசான் சரீப் நகரில் ஈரான் தூதரகத்தை தாலிபான்களால் தாக்கப்பட்டதில் 10 தூதரக அதிகாரிகள் உயிரிழந்தனர் .

08/08/2000- அமெரிக்க உள்நாட்டுப் போரில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பல் 136 ஆண்டுகளுக்குப் பின்னர் கடலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது .

08/08/2008- 29வது ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் தொடங்கப்பட்டன.

08/08/2010- சீனாவில் கான்சு மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 1,400 பேர் உயிரிழந்தனர் .

08/08/2013- பாகிஸ்தான் குவெட்டாவில் நடந்த இறுதி சடங்கில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர்.

08/08/2016- பாகிஸ்தான் குவெட்டாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பயங்கரவாதிகள் தற்கொலை குண்டு வெடிப்பு , மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 94 பேர் கொல்லப்பட்டனர்.

Post a Comment

0 Comments