வரலாற்றில் இன்று ஆகஸ்ட் - 8

வரலாற்றில்  இன்று
07/08/கி.மு.322 -
மகா அலெக்சாண்டர்  இறந்ததை அடுத்து
ஏதென்சுக்கும், மாசிடோ7னியாவிற்கும் இடையே 'கிரானன்' என்ற இடத்தில் போர் இடம்பெற்றது .

07/08/461- ரோமப் பேரரசர் மசோரியன்  கைது செய்யப்பட்டு வடமேற்கு இத்தாலியில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் .

07/08/936- முதலாம் ஓட்டோ ஜெர்மனியின் மன்னராக முடி சூடினார் .

07/08/1832- இலங்கையில் 'கொழும்பு சேமிப்பு வங்கி' ஆரம்பிக்கப்பட்டது.

07/08/1840- சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தடை செய்து பிரிட்டிஷ் பாராளுமன்றம் சட்டம் நிறைவேற்றியது.

07/08/1890- ஸ்வீடனில் கொலை குற்றத்திற்காக,
அன்னா மன்ஸ்டோட்டர்  தூக்கிலிடப்பட்ட கடைசி பெண் ஆனார்.

07/08/1898- யாழ்ப்பாணம் மானிப்பாய் மருத்துவமனை புதிய கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

07/08/1906- கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு, பார்சி பேகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது .

07/08/1914- முதலாம் உலகப் போர்: ஜெர்மனி, பெல்ஜிய நகரான லீஜைத்  தாக்க தொடங்கியது .

07/08/1927- அமெரிக்கா - கனடா இடையே அமைதிப்  பாலம் திறந்து வைக்கப்பட்டது.

07/08/1930- பிரிட்டனில் 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

07/08/1933- ஈராக்கில் சிமேல் கிராமத்தில் அசீரியன்ஸ் (Assyrians)  எனப்படுவோர் 3,000 பேர் ஈராக் அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.

07/08/1941- கீதாஞ்சலி மற்றும் தேசிய கீதம் தந்த ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் காலமானார் .

07/08/1955- சோனியின் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலி ஜப்பானில் விற்பனைக்கு வந்தது.

07/08/1956- கொலம்பியாவில் வெடிமருந்துகள் ஏற்றிச்சென்ற 7 ராணுவ லாரிகள் வெடித்து சிதறியதில் 1,200 பேர் உயிரிழந்தனர் .

07/08/1959-
எக்ஸ்ப்ளோரர் - 6
எனும் அமெரிக்கச்  செயற்கைகோள் முதல்முறையாக புவியின் படத்தை எடுத்து அனுப்பியது.

07/08/1960- ஐவரிகோஸ்ட் பிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தது .

07/08/1970- எகிப்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே 90 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

07/08/1989- எத்தியோப்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் விக்கி லேலண்ட் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

07/08/1990- மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தும் முடிவை பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார் .

07/08/1998- தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்கத் தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 212 பேர் உயிரிழந்தனர் .

07/08/2008- தெற்கு ஒசேத்தியா தொடர்பான ரஷ்ய -ஜார்ஜியப் போர் ஆரம்பமானது.

07/08/2017- உத்தரப் பிரதேசத்தில் பாபா ராகவதாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அடுத்த 5 நாட்களில் சுமார் அறுபது குழந்தைகள் ஆக்சிஜன் தரப்படாமல் இறந்தனர்.

Post a Comment

0 Comments