இந்தியாவில் மொத்தம் எத்தனை மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சி பகுதிகள் உள்ளன?





          ந்திய அரசுமைப்புச் சட்டத்தின் 370-ஆம்( article 370)  பிரிவில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பகுதிகள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய வரைப்படத்தில் அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பிடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அரசு வேலை போன்றவை காஷ்மீரிகளுக்கு மட்டுமேயான உரிமை என்னும் அரசமைப்புச்சட்டத்தின் 35ஆம் (article -35) பிரிவும் இத்துடன் ரத்து செய்யப்பட்டது.

 பாராளுமன்ற நிறைவேற்றிய ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்திற்கு (Jammu and Kashmir reorganisation Act,2019) குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்ததொடு, மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்னும் இரண்டு மத்திய ஆட்சிபகுதிகளாக மாறியது (2019 அக்டோபர் 31ம் தேதி) முதல் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தன.

          இந்தியாவில் 2020 –ஆம் ஆண்டின்  தகவலின் படி 28 மாநிலங்களும் 8 மத்திய ஆட்சி பகுதியும், தேசிய தலைநகர் பகுதி தில்லியிலும் அமைந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் மத்திய் ஆட்சி பகுதிகள் பெயர் பட்டியலை காணலாம்.



இந்தியாவின் தற்போதிய மாநிலங்கள் – 28 :

  1. அசாம்
  2. அருணாசலப் பிரதேசம்
  3. ஆந்திரப் பிரதேசம்
  4. உத்தரகாண்ட்
  5. உத்திரப்பிரதேசம்
  6. ஒடிஷா
  7. கர்நாடகம்
  8. குஜராத்
  9. கேரளம்
  10. கோவா
  11. சட்டீஷ்கர்
  12. சிக்கிம்
  13. தமிழ்நாடு
  14. திரிபுரா
  15. தெலங்கானா
  16. நாகாலாந்து
  17. பஞ்சாப்
  18. பீகார்
  19. மகாராஷ்டிரம்
  20. மணிப்பூர்
  21. மத்தியப் பிரதேசம
  22. மிசோரம்
  23. மேகாலயா
  24. மேற்கு வங்காளம்
  25. ராஜஸ்தான்
  26. ஜார்கண்ட்
  27. ஹரியானா
  28. ஹிமாசலப் பிரதேசம்




மத்திய ஆட்சிப் பகுதிகள் - 8:

1.   அந்தமான் -  நிகோபார் தீவுகள்
2.    இலட்சத்தீவுகள்
3.   சண்டிகர்
4.   தாத்ரா நாகர் ஹவேலி
5.   புதுச்சேரி
6.   டாமன் - டையூ
7.   ஜம்மு - காஷ்மீர்  (புதிதாக சேர்க்கப்பட்டது)
8.   லடாக்  - (புதிதாக சேர்க்கப்பட்டது)


தேசிய தலைநகரப் பகுதி -  தில்லி




மத்திய ஆட்சிப் பகுதிகளில் அப்படி என்ன நடகின்றது?

       இந்தியக் கூட்டாட்சி அமைப்பில், ஆட்சி நிர்வாக வசதிக்காக நாட்டை மாநிலங்கள் மத்திய ஆட்சிப் பகுதிகள் என்னும் இரண்டு அமைப்புகளாக பகுத்துள்ளனர்.  மாநில நிர்வாகிகளுக்கு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் அமைந்தவை மத்திய ஆட்சிப் பகுதிகள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் கவர்னர் அல்லது நிர்வாகியே மத்திய ஆட்சிப் பகுதியின் ஆட்சிப் பொறுப்பை வகிக்கிறார்.


தில்லி, புதுச்சேரி தவிர்த்த ஏனைய மத்திய ஆட்சிப் பகுதிகளில் சட்டப்பேரவை இல்லை. இந்த இரண்டு இடங்களிலும் லெப். கவர்னரே ஆட்சி புரிகிறார். ஆனால் பிற இடங்களில் குடியரசுத்தலைவரின் பிரதிநிதியான நிர்வாகியே (Administrator) ஆட்சி புரிகிறார். மாநிலங்களிn எக்ஸ்குட்டீவ் தலைவர் கவர்னர். மத்திய ஆட்சிப் பகுதிகளில்  நிர்வாகத் தலைவர் குடியரசுத் தலைவர்.


ஆர்டிக்கிள் 370 நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து நடைமுறைக்கு வந்த மாற்றங்கள்:

  • ஜம்மு-காஷ்மீர் அரசமைப்புச் சட்டம் செல்லாததாகிறது. இந்தியாவின் உரிய அதிகாரங்கள் மட்டும் ஜம்முகாஷ்மீரிலும்.
  • இந்திய, ஜம்முகாஷ்மீர் இரட்டை குடியுரிமை இனி இல்லை. இந்தியாக் குடியுரிமை மட்டுமே.
  • இந்திய குடிமகன்கள் எவரும் ஜம்முகாஷ்மீரில் நிலம் வாங்கவும், விற்கவும், தொழில் செய்யவும் உரிமை பெறுகின்றது.
  • ஜம்முகாஷ்மீருக்கென தனிக்கொடி இல்லை. இந்திய தேசியக் கொடியே இருக்கும்.
  • தனி தேசிய கீதத்துக்குப் பதிலாக இந்திய தேசிய கீதம் தான் பின்பற்ற வேண்டும்.
  • இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் காஷ்மீரிகளுக்கு வழங்கப்படுகிறது.
  • மாநில அரசின் அனுமதியின்றி பாராளுமன்றம் இனி எந்தவிதமான சட்டத்தையும் அறிமுகப்படுத்தலாம்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,



Post a Comment

0 Comments