இன்று ஜீரோ நிழல் நாள் - (Zero Shadow Day)! அப்படி என்றால் என்ன?





             கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே அமைந்துள்ள வெப்ப மண்டல பகுதியை  சூரியன் கடக்கும் போது இரண்டு நாட்கள் மட்டும் மதிய வேளையில்நிழல் விழாத நிகழை தான் நாம் பூஜ்ய நிழல் நாள்(Zero Shadow Day) என்று அழைக்கிறோம்.


நம்ம முன்னோர்கள் நிழலின் அளவினை வைத்து மணி சொல்லுவார்கள் இன்றும் சில இடங்களில் நிழற் கடிகாரங்கள் வைத்து மணி சொல்லி கொண்டு தான் இருகின்றார்கள். ஆனால் அந்த நிழல் இல்லை என்றால் எப்படி இருக்கும். இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்வி இருக்கும். ஆனால் அதற்கு பதில் ஆம், நிழல் இல்லாமல் இருக்கும் நாள் ஒன்று இருகின்றது. அதனை தான் நாம் அனைவரும்  பூஜ்ய நிழல் நாள்(Zero Shadow Day) என்று அழைக்கிறோம். அது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம். வாங்கள் அறியலாம் அறிவிலை!

உலகில் ஒவ்வொரு ஆண்டும்,  ஒவ்வொரு பகுதியிலும், கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் உள்ள  நில பரப்பில்  உலக வெப்ப மண்டல பகுதியை சூரியன் கதிர்கள்  கடக்கும் போது இரண்டு நாள்கள் மட்டும் மதிய வேளையில் நிழல் விழாத நிகழ்வு ஏற்படுகிறது.

அந்த நேரத்தில் சூரியன் நமது தலைக்கு நேர் உச்சியில் இருக்கும். இதனால் மதிய நேரத்தில் நாம் சூரிய ஒளியில் நின்றால் நமது நிழல் நமது பாதத்தின் கீழ் நேராக விழும். அதனால் நமது நிழலை நாம் பார்க்க முடியாது. இந்த நிழ்வுக்கு "நிழலில்லா நாள்' என்று அழைக்கப்படுகின்றது.
  
இந்தியாவில் இந்த நிகழவானது ஆண்டுக்கு இரண்டு  முறை நடைபெறும். அதிலும்  குறிப்பாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மாதங்களில் இந்நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.   

This happens twice a year for the people living between latitudes of 23.5°N and 23.5°S. April 24 is Zero Shadow day for Chennai and Bangalore (13°N).



எப்படி சாத்தியம் பூஜ்ய நிழல் நாள்:



                    நம் பூமியானது, தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் அதன் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது.  பூமியின் அச்சானது சூரியனைச் சார்ந்து 23.45 டிகிரி கோணத்தில் ( தோராயமாக 23.5’) சாய்வாக சுற்றுகிறது.  இதன் காரணமாக தான் நமக்கு பருவநிலை மாறுபாடுகள் உண்டாகின்றது  என்பதை சிறு வயதில் பள்ளி பாடங்களில் படித்துள்ளோம்.

ஒவ்வோரு நாளும் சூரியனால் உருவாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும்.   அந்த  நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின்னர்  மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லுவது வழக்கம்.

     ஆனால்,  வழக்கத்திற்கு மாறாக  ஓர் வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலைக் உச்சி மதிய வேளையில் கூட காண இயலாது. அந்த நாட்கள் நிழல் காணஇயலா நாள் அல்லது பூஜ்ய நிழல் நாள் என்றழைக்கப்படுகிறது.



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,









Post a Comment

0 Comments