வரலாற்றில் இன்று ஜூலை 22 - திங்கள்





22/07/1823- யாழ்ப்பாணத்தில் பட்டுக்கோட்டா  குருமடம், டேனியல் வாரன் பூர்  தலைமையில்           ஆரம்பிக்கப்பட்டது.

22/07/1908 - பாலகங்காதர திலகர் வழக்கு விசாரணை முடிந்து நாடு கடத்தப்பட்டார்.

22/07/1917 - பிரிட்டனில் தேசிய குழந்தைகள் வாரம் துவங்கியது.

1917 - ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் கடும்போர் நிகழ்ந்தது .பலத்த உயிர் சேதத்துடன் பிரெஞ்சுப் படைகள்  இழந்த இடங்களை மீட்டன.

1917-ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா மீது சயாம் போர் பிரகடனம் செய்தது .

22/07/1918- ஆஸ்திரியா பிரதமர் செய்ட்லெர் கருத்து வேற்றுமை காரணமாக பதவி விலகினார்.

22/07/1919 - ஹங்கேரி, ருமேனியா மீது தாக்குதலை ஆரம்பித்தது.

22/07/1933-  தனிநபராக  விமானத்தில் உலகை சுற்றிவர புறப்பட்ட வைலி போஸ்ட் என்ற அமெரிக்க விமானி  தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார் இதற்காக அவருக்கு ஏழு நாள் 18 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆனது.

1942- இரண்டாம் உலகப் போர்: போர்க்கால தேவைக்காக அமெரிக்காவில் பெட்ரோல் ரேஷன் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

22/07/1944- போலந்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஆரம்பமானது .

22/07/1946- ஜெருசலேமில் பாலஸ்தீனத்தின்  நிர்வாக மையம் அமைந்திருந்த கட்டிடத்தில் சியோனிஸ்டுகள் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.

22/07/1950 -ஆறு ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த பெல்ஜிய மன்னர் லியோபோல்ட் நாடு திரும்பினார் .

22/07/1951- அட்லாண்டிக் கடலில் பிலிப்பைன் அகழியின் ஆழம்  கண்டுபிடிக்கப் பட்டது. கப்பலில் இருந்து இறக்கப்பட்ட நீள் தூண்டில்
12,163 மீட்டர் ஆழம் வரை சென்று தரையை தொட்டது. அவ்வளவு ஆழத்திலும் உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

22/07/1962- நாசாவின் மரைனர்- 1 விண்கலம்
ஏவப்பட்டு சில நிமிடங்களில் கட்டுக்கடங்காமல் சென்றதால் அது அழிக்கப்பட்டது.

22/07/1968- இந்தியாவின் முதல் பெண் டாக்டரான திருமதி முத்துலட்சுமி ரெட்டி காலமானார்.

22/07/1974-  .நா.வின் தலையீட்டினால் துருக்கியும்,
சைப்ரசும் போர் நிறுத்தம் செய்ய ஒத்துக் கொண்டன.

22/07/1983- போலந்தில் ராணுவச் சட்டம் அதிகாரப்பூர்வமாக திரும்பப்பெறப்    பட்டது.

22/07/1999- விண்டோஸ் லைவ் மெசேன்ஜர் மைக்ரோசாப்ட்டினால் வெளியிடப்பட்டது.

22/07/2003 -ஈராக்கில் சதாம் உசேனின் இரு மகன்கள் மற்றும் 14 வயது பேரனும்  அமெரிக்க ராணுவத்தினரால் கொல்லப் பட்டனர்.

22/07/2009- 21 ம் நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் நிகழ்ந்தது. வட இந்தியா, நேபாளம், வங்காளதேசம் போன்ற இடங்களில் முழு கிரகணம் ஏற்பட்டது .

22/07/2011- நார்வேயில் இரண்டு தீவிரவாத தாக்குதல் இடம்பெற்றன.  மொத்தம் 77 பேர் உயிரிழந்தனர் .

22/07/2013- சீனாவில் டிங்கி என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கங்களில் 89 பேர் உயிரிழந்தனர்

Post a Comment

0 Comments