வரலாற்றில் இன்று ஜுலை - 25








25/07/306- முதலாம் கான்ஸ்டன்டைன் ரோமப்பேரரசராக அவரது படையினரால் அறிவிக்கப்பட்டார்.

25/07/1547- இரண்டாம் ஹென்றி  பிரான்ஸின் மன்னராக முடி 
சூடினார். 

25/07/1583- கோவாவில் போர்ச்சுகீஸ்  ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. ஐந்து கிறிஸ்தவ மதகுருமார்கள், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் 
கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் கொல்லப்பட்டனர்.

25/07/1593- பிரான்ஸின் நான்காம் ஹென்றி பகிரங்கமாக  புராட்டஸ்டன்டிசத்திலிருந்து ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறினார்.

25/07/1603- ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

25/07/1813- இந்தியாவில் முதன் முதல் படகுப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

25/07/1837- மின்சார தந்தியின் வணிகரீதியான பயன்பாடு லண்டனில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

25/07/1838- தேசிய விளையாட்டு கூட்டமைப்பு 37  அமைப்புகளுடன்  எடின்பர்க்கில் நிறுவப்பட்டது.

25/07/1894-  முதலாம் சீன- ஜப்பான் போர் ஆரம்பமானது .

25/07/1898- புவேர்ட்டோ ரிக்கோவை  அமெரிக்கா ஸ்பெயினிடம் இருந்து கைப்பற்றியது .

25/07/1908- திலகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மும்பையில் பொது வேலை நிறுத்தம் நடந்தது.

1908- அஜி-ன-மோட்டோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப் பட்டது.

25/07/1917- கனடாவில் முதல் தடவையாக வருமானவரி அறிமுகப்படுத்தப் பட்டது.

25/07/1921-  அமெரிக்கா ஜெர்மனியுடன் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.

25/07/1922- நேருவின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

25/07/1943 -இத்தாலி சர்வாதிகாரி முசோலினி பதவியிலிருந்து விலக்கப்பட்டார். 

25/07/1945-  பிரிட்டிஷ் பர்மாவை மீண்டும் கைப்பற்றி ஜப்பானியர்களை விரட்டியடித்தது.

25/07/1948- பிரிட்டனில் ரொட்டிக்கு விதித்திருந்த ரேஷன் முறை நீக்கப்பட்டது.

25/07/1956- அமெரிக்காவின்
நான்டக்கெட் தீவுக்கருகில் இத்தாலிப்  பயணிகள் கப்பல், மற்றொரு கப்பலுடன் மோதி மறுநாள் மூழ்கியது. 51 பேர் உயிரிழந்தனர்.

25/07/1957- துனீசியா குடியரசு நாடானது.

25/07/1962- அல்ஜீரியாவில் முஸ்லிம்களின் இரு பிரிவினர் இடையே கலகம் ஏற்பட்டதில் பலர் மாண்டனர்.

25/07/1972- தெற்கு பசிபிக்கில் பிரான்ஸ் அணு ஆயுத சோதனை செய்தது.

25/07/1973- ரஷ்யாவின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.

25/07/1977- நீலம் சஞ்சீவ ரெட்டி இந்தியாவின் ஆறாவது ஜனாதிபதியாகப்  பதவியேற்றார்.

25/07/1978 - (டெஸ்ட் டியூப்) முதல் சோதனைக் குழாய் குழந்தை (லூயிஸ் பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தது. 

25/07/1979- சினாய் தீபகற்பத்தில் இன்னும் ஒரு பகுதியை இஸ்ரேல் எகிப்திடம் திருப்பிக் கொடுத்தது. 

25/07/1982- இந்தியாவின் ஏழாவது ஜனாதிபதியாக கியானி ஜெயில் சிங் பதவி ஏற்றார். 

25/07/1983- கொழும்பு, வெலிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரை , ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள், சிங்களக் கைதிகளால் கொலை செய்யப்பட்டனர்.

25/07/1987-  இந்தியாவின் எட்டாவது ஜனாதிபதியாக ஆர். வெங்கட்ராமன் பதவியேற்றார்.

25/07/1992- சங்கர் தயாள் சர்மா இந்தியாவின் 9 வது ஜனாதிபதியாகப்  பதவியேற்றார்.

1992- ஸ்பெயினில்  இருபத்தைந்தாவது ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது.

25/07/1993- தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 11 மதகுருக்கள் உயிரிழந்தனர்.

1993- இஸ்ரேல்,  லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது .
ஏழு நாட்கள் 
இப்போர் நீடித்தது.

1993- மண்கிண்டிமலை ராணுவ முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது .

25/07/1994- இஸ்ரேலும் ஜோர்டானும் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டதில் 46 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது.

25/07/1997-  இந்தியாவின் முதல் தலித் ஜனாதிபதியாக கே. ஆர்.நாராயணன் பதவி ஏற்றார் .

25/07/2000- கான்கார்ட் ஏர் பிரான்ஸ் விமானம், பாரிஸில் சார்லஸ்
டிகால் விமான நிலையத்தில் விழுந்ததில், அதில் பயணம் செய்த 109  பேரும் தரையில் நான்கு பேரும் உயிரிழந்தனர் .

25/07/2007- பிரதீபா பாட்டீல்  இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரானார் .

25/07/2010- ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

Post a Comment

0 Comments