வரலாற்றில் இன்று ஜூலை - 26




26/07/1509- கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசராக  முடிசூடினார்.

26/07/1745- முதலாவது பெண்கள் துடுப்பாட்ட போட்டி 
இங்கிலாந்து கில்ட் போர்ட் நகரில்  நடைபெற்றது.

 26/07/1758- செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவை பிரான்சிடம் இருந்து பிரிட்டன் கைப்பற்றியது.

26/07/1788- நியூயார்க், அமெரிக்காவின் 11 வது மாநிலமாக இணைந்தது.

26/07/1790-  பிலடெல்பியாவில்
டெலாவேர் நதியில்  பயணிகளுக்காக நீராவிப் படகுப்  போக்குவரத்து முதல் முதல் துவக்கப்பட்டது.

26/07/1814 - ஸ்வீடன் -  நார்வே போர் ஆரம்பமானது.

26/07/1825- புவெர்ட்டோ ரிக்கோவில்
வீசிய கடும் சூறாவளியில் 374 பேர் உயிரிழந்தனர் .

26/07/1847 -லைபீரியா அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

26/07/1848- இலங்கையில் பிரிட்டனுக்கு எதிராக
வீரபுரன் அப்பு  தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 ல் தூக்கிலிடப்பட்டார்.

26/07/1891- தாஹிதி பிரான்சுடன்  இணைந்தது.

26/07/1917- போர்க் கைதிகள் பற்றி பிரான்ஸ் - ஜெர்மனி ஒப்பந்தம் கையெழுத்தானது.

26/07/1941-  அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் ஜப்பானின் சொத்துக்கள் முடக்கப்பட்டன .

26/07/1944- இரண்டாம் உலகப் போர் : ரஷ்யாவின் செஞ்சேனைப்  படைகள் மேற்கு
உக்ரைனின் லிவீவ்  நகரில் நுழைந்து, அதனை நாஜிக்களிடம்  இருந்து கைப்பற்றின. நகரின் ஒரு லட்சத்து 60 ஆயிரம் யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சி இருந்தனர்.

1944- அமெரிக்கப் படைகள் குவாம் எனும் இடத்தை கைப்பற்றின.

26/07/1945- ஹிரோஷிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டை தாங்கிய வண்ணம் இண்டியானா போலிஸ் என்ற அமெரிக்கக்  கடற்படைக் கப்பல்
டினியான் தீவை அடைந்தது.

26/07/1948- ராணுவத்திலும் அரசுப் பணியிலும் இனவேறுபாடிற்கு  தடைவிதித்து அமெரிக்க அதிபர் ஆணை
பிறப்பித்தார்.

26/07/1952- எகிப்தில் நடந்த ராணுவப் புரட்சியில்
மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு வயது மகன் புவாத் மன்னன்  ஆக்கப்பட்டான்.

26/07/1953- கியூபாவில் மொன்காடா  ராணுவத்தளம் மீது பிடல் காஸ்ட்ரோ தலைமையில் புரட்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
கியூபாப் புரட்சிப் போர் ஆரம்பமானது.

26/07/1956- உலக வங்கி அஸ்வான் அணை கட்ட நிதி உதவி தர மறுத்ததால் எகிப்து ஜனாதிபதியான கமால் அப்துல் நாசர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார் .

26/07/1957- குவாட்டமாலாவின்  சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ்  கொல்லப்பட்டார்.

26/07/1958- இளவரசர் சார்லஸிற்கு  'பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ' எனும் பட்டப் பெயர் கொடுக்கப்பட்டது .

26/07/1963-
யூகோஸ்லோவியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஸ்கோப்ஜே நகரம் தரைமட்டமானது. 1,100 பேர் உயிரிழந்தனர்

26/07/1965- மாலத்தீவுகள் பிரிட்டனிடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.

26/07/1971-  அப்பல்லோ -15 எனும் விண்ணூர்தி செலுத்தப் பட்டது. இதில் சென்ற  விண்வெளி வீரர்கள் 67 மணி நேரம் நிலவில் தங்கியிருந்தனர்.

26/07/19747 -  ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது .

26/07/1977- கனடா,  கியூபெக் மாநிலத்தில் பிரெஞ்சு மொழி அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

26/07/1978- மலேசிய கடற்கரையில்  வியட்நாம் அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூழ்கியதில் 217 பேர் உயிரிழந்தனர் .

26/07/1992- அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நிறுத்தப்பட்டது .

26/07/1993- தென்கொரியாவில்
மொக்போ விமான நிலையத்தில் தரையிறங்க  ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் மலையில் மோதியதில் , அதில் பயணம் செய்த 116 பேரில் 68 பேர் உயிரிழந்தனர் .

26/07/1999 - கார்கில் போர் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

26/07/2005- டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.

2005- மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரு மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 5,000 பேர் வரை உயிரிழந்தனர்.

26/07/2008- அகமதாபாத் நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments