வரலாற்றில் இன்று 16/08/2019-வெள்ளி




16/08/946-  எட்ரெட் இங்கிலாந்தின் மன்னராக முடிசூட்டப் பட்டார்.

16/08/963- இஸ்தான்புல் பேரரசராக பிக்போரோஸ் முடிசூட்டப்பட்டார்.

16/08/1513 - கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி பிரெஞ்சுப் படைகளை வென்றார் .

16/08/1812- நெப்பொலியன் ரஷ்யா மீது படையெடுத்தார். மறுநாள் வெற்றிபெற்று திரும்பும்போது கடும் பனியினால் 75 சதவீத வீரர்கள் இறந்துவிட்டனர்.

16/08/1858- அட்லாண்டிக் கடலில் தந்தி கேபிள்  அமைக்கும் பணி முடிந்து, விக்டோரியா மகாராணி அமெரிக்க ஜனாதிபதி புச்சானனுக்கு முதல் முதல் செய்தி அனுப்பினார். எனினும் பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் சேவை நிறுத்தப்பட்டது .

16/08/1863- நான்காண்டுகள்  ஸ்பெயின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.

16/08/1869- சிறுவர்களைக் கொண்ட பராகுவேப் படையினரை பிரேசில் ராணுவத்தினர் படுகொலை செய்தனர்.

16/08/1886- இந்தியாவின் ஆன்மிகச் சுடரொளி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் காலமானார்.

16/08/1891- ஆசியாவின் முதல் எஃகால் ஆன  பசிலிக்கா தேவாலயம் மணிலாவில்  அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

16/08/1906-சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3,882  பேர் உயிரிழந்தனர்.

16/08/1914- லீஜ் நகரை ஜெர்மனி கைப்பற்றியது .

16/08/1918- ஜெர்மனி மீது பிரிட்டனின் முதல் விமானத் தாக்குதல் தொடங்கியது.

16/08/1929- பாலஸ்தீனத்தில் பாலஸ்தீன அரபுகளுக்கும், யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும்,116 அரபுக்களும் உயிரிழந்தனர்.

16/08/1941-கல்கி வார இதழ் தொடங்கப்பட்டது.

16/08/1943- மெசினா நகரை  அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.

1943- இரண்டாம் உலகப்போர்: ஜப்பானின் தளத்தை அமெரிக்க விமானங்கள் தாக்கி அழித்தன. இத்தாக்குதலில் 300 ஜப்பானிய விமானங்கள் அழிக்கப்பட்டன .1,500 விமானிகள் கொல்லப்பட்டனர்.

16/08/1946- கல்கத்தாவில் இந்து- முஸ்லிம் கலவரங்கள் ஆரம்பமானது. அடுத்த
72 மணி நேரத்தில் நான்காயிரம் பேர் உயிரிழந்தனர் .

16/08/1953- ஈரானில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக
இரான் ஷா நாட்டைவிட்டு ஓடினார்.

16/08/1960-
82 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆதிக்கத்தில்  இருந்து சைப்ரஸ் விடுதலை அடைந்தது.

16/08/1962-பாண்டிச்சேரி
யூனியன் பிரதேசமானது.

16/08/1977- புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைப் பாடகர் எல்விஸ் பிரெஸ்லி காலமானார் .

16/08/1987- அமெரிக்காவின் டெட்ராய்ட் விமான  தளத்தில் இருந்து புறப்பட்ட உடனேயே ஒரு விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 155 பயணிகளில் நான்கு வயது குழந்தையைத்  தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

16/08/2005- வெனிசுலாவில் மேற்கு கரீபியன் விமானம்  விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 160 பேரும் உயிரிழந்தனர் .

16/08/2013- பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 61 பேர் உயிரிழந்தனர் 59 பேர் காணாமல் போயினர்.

Post a Comment

0 Comments