இருமல், சளி இவைகள் ஒழிக்க சித்த மருந்துகளின் எளிய முறைகள்



சளி காய்ச்சல் உடற்சோர்வு இவை எல்லாவகை பருவத்திலும் பருவமாற்றத்தின் அடிப்படையிலும். நமது வாழ்வியல் முறையில் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் பருவமாற்றத்தின் அடிப்படையிலுமே உண்டாவதாகும் .

  • முதலில் சொன்னது இயற்கை பருவநிலை மாற்றம் இதனை உரிய ஊட்ட முறைமைகளை கொண்டு நிறைசெய்திடலாம்.


  • இரண்டாவதாக செயற்கையாக நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பருவமாற்றச்சூழலால் நமது உடல் பலகீனமடைவது மட்டுமல்லாமல் நமது மரபணுக்களும் முடக்கப்படுகிறது.


  • இதனால் உடலில் நோய்த்தடுப்பாற்றல் வெகுவாக குறைந்து நோய்த்தொற்றுகள் அதிகரித்து மிகச்சுலபமாக நம்மை நோயாளியாக மாற்றுகிறது.

சளி மற்றும் காய்ச்சலுக்கான தடுப்பாற்றல் முறைகளை காண்போம்:-
ஏலக்காய் 2-3 எண்ணம்
கிராம்பு 2-3 எண்ணம்
மிளகு 10-15 எண்ணம்
மல்லிவிதை
இவற்றை இடித்து பொடித்து

  •   4🍵 குவளை நீர்விட்டு அடுப்பிலேற்றி காய்ச்சி ஒரு🍵 குவளையாக வற்றவைத்து இறக்கி வடித்து அதில் தேன் அல்லது பணங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை ஏதும் கலந்து பருகினால் நலமாகும்.
  •  ஒரு 🍵குவளை மிதமான சுடுநீரில் ஓரிரு பச்சை கற்பூரத்தை பொடித்து கலந்து பருகினாலும் சளிக்காய்ச்சல் கட்டுபடும்.
  • கைப்பிடியளவு கொத்துமல்லி தழையை அலசிவிட்டு வேறுடன் சிறுதுண்டுகளாக வெட்டி பாத்திரத்திலிட்டு ஒரு சீரகம் ஒருதுண்டு இலவங்கப்பட்டை, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியுடன் ஒருலிட்டர் நீர் சேர்த்து காய்ச்சி நான்கில் ஒருபாகமாக வற்றவைத்து வடித்து பருகினால் காய்ச்சல் உடல் அசதி அனைத்தும் கட்டுப்படும் நன்றாக பசித்து சாப்பிடத்துவங்கிடலாம் .

கடும் கோழையை அகற்றும் அற்புதமான மூலிகை தூதுவேளை

·         கைப்பிடியளவு தூதுவேளை கீரையை எடுத்து அலசி அரைத்து விழுதாக எடுத்துக்கொண்ட, அதனுடன் சமளவு நெய்சேர்த்து சிறுதீயில் ஓரிரு நிமிடம் வதக்கினால் நெய்யுடன் கீரையும் ஒன்றாக கலந்திடும்.

·         அதனை ஒரு வெள்ளை துணியில் வடித்து பிழிந்த சாற்றினை குழந்தைக்கு படுக்கும்பொழுது கொடுத்து படுக்கவைத்திடலாம்.

இவ்வாறு ஒரு நாளைக்கு காலை இரவு என இருவேளை இருநாட்கள் கொடித்தால் போதும் நெஞ்சுக்கூட்டில் உள்ள சளிப்படலமும் நுண்தொற்றுக்களும் ஓரிரு நாளில் இருந்த சுவடில்லாமல் மாயமாக மறைந்துபோகும்.  குழந்தைகள் சுறுசுறுப்புடன் நிலைபெறுவார்கள்

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் எப்பட்ட சளி பாதிப்பாயினும் இம்முறைமை மிகச்சுலபமாக சரிபடுத்திடும்.

Post a Comment

0 Comments