மாசுயின்றி கொண்டாடுவோம் - பூமி தினத்தை (50th Earth day)





        சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்களுக்கு இல்லாத வித்தியாசம் நமது பூமிக்கு ஒரு சிறப்பு உண்டு அதனால் தான் பூமியை உயிர்கோளம் என்று அழைக்கிறோம். உயிர்கள் கொங்ஞ்சி விளையாடும் இப்புவியை சுற்றுச்சூழல் மாசுயின்றி பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த பூமி தினம் கொண்டாடப்படுகின்றது. இன்று 50-வது ஆண்டு பூமி தினத்தை சர்வதேச நாடுகள் கொண்டாடுகின்றது.

இயற்கையின் கோபத்திற்கு ஆளான மனிதன் இன்று வீடுகளில் முடங்கி உள்ளான் அதற்கு முக்கிய காரணம் அவன் செய்த செயல் தான். ’திணை விதைத்தவன் திணை அறுப்பான்; விணை விதைத்தவன் விணை அறுப்பான்’. அந்த விணையினால் தான் இன்று அனைவரும் வீட்டில் முடங்கி கிடைக்கிறோம்.

கொரோனா நமக்கு ஒரு நல்ல பாடம் சூட்டி சென்றுள்ளது. இயற்கையினை எதிர்த்தால் இறப்பு தான் மிச்சம். பூமி தாயின் தாகத்தை அறியாமல் தனது இஷ்டத்திற்கு ஆடி கொண்டு இருந்த மனித பூச்சிகளுக்கு தற்போது புரிந்துள்ளது இயற்கையின் கோபம் என்னவென்று.


எதனால் பூமி தினத்தை கொண்டாடுகிறோம்: 
    

      1969-ம் ஆண்டு அன்று  அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள  சாண்டா பார்பரா நகரை ஒட்டிய கடல் பகுதியில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த கசவின் காரணமாக  அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய கொடூர நிகழ்வின் அன்று நிகழ்ந்தது.


 அந்த தாக்கத்தின் காரணமாக  சுகாதாரமான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேண்டுமென 1970-ம் ஆண்டு   அமெரிக்க மக்கள் ஒன்றிணைந்து கடலோரமாகவே  ஊர்வலம் சென்றனர். பின்னர் ஐக்கிய நாடுகளின் சபையில் இந்த தினத்தை  1970-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் உலக பூமி தினம் ஏப்ரல் 22-ம் தேதி கொண்டாடப்படும் என்று ஏற்று கொள்ளப்பட்டது.  பூமியைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயேபூமி தினம்கொண்டாடப்பட்டு வருகிறது .

     உலக பூமி தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ம்  ஆண்டு பூமி தினத்தைவோட்டி, உயிரினங்களைக் காப்போம்என்பதே கருத்தாக  ஏற்றுகொள்ளப்பட்டது.  பூமியின் பாதுகாப்பை அனைத்து நாட்டு மக்களும்  உறுதி செய்யவேண்டும் என்று  ஐநா இந்தத் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. பூமியின் பாதுகாப்பையோட்டி உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் தேடல் தளமான கூகுள் கூட ஒரு சிறப்பு டூடுள் வெளியிட்டு பூமி தினத்தை கொண்டாடி வருகின்றது.

             
          நாமலும் நம்மல் முடிந்த வரை பூமிக்கு எவ்வித சுற்றுச்சூழல் மாசுகள் ஏற்படுத்தமால் வாழலாம்.நம்ம முடிந்த வரை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கலாம், பெட்ரோல் வானங்களையின்றி மின் வாகனங்களை பயன்படுத்தலாம். இயற்கை உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம், குப்பைகளை தரம் பிரித்து குப்பை தொட்டிகளில் போடலாம். இது போன்ற சிறு சிறு மாற்றங்கள் மூலம் நமது பூமியின் மாசுகளை குறைக்கலாம், இந்த 50 ஆண்டு பூமி தினத்தையோட்டி  நாம் அனைவரும் ஒன்று இணைந்து புவியை காத்தியிடலாம்.

Post a Comment

3 Comments

Harish said…
Good information
aroon said…
Super👏👏👏
aroon said…
Super 👏👏👏