மின்மினிப் பூச்சி எப்படி மின்னுகிறது?




அனைவரும் சின்ன சிறு வயதில் மின்மினிப் பூச்சியை  கையில் பிடித்து விளையாடியது உண்டு. ஆனால் இப்போது அனைவருக்கும் எழும் கேள்வி அது எப்படி மின்மினிப் பூச்சி மட்டும் மின்னுகிறது என்று. அதற்கான விடை தான் தற்போது பார்க்க போகிறோம்.

இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் Bio- chemical முறையாகும்.  உங்களுக்கு தெரிந்த ஒரு எடுத்துக்காட்டு சொல்லுறேன் Bioluminescence   எனப்படும் மெழுகுவர்த்தி மற்றும் மின்விளக்கு இதன் மூலம்  ஒளி வெப்பம் நிறைந்து ஒளி கொடுக்கிறது.

மின்மினிப் பூச்சி  ஒளியில் லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள் உள்ளது. அதில் பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது.

இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme)  உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது

மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.

 இனிமே மின்மினிப் பூச்சியை பார்த்தால் என் மின்னுகிறது என்று அனைவருக்கும் சொல்ல வேண்டும்.



Post a Comment

0 Comments