அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் இரண்டு கால்களை இழந்த ஆமைக்கு, பொம்மை காரின் சக்கரங்களை கொண்டு வீல் சேர் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆமைக்கு ’வீல் சேர்’:
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவமனையில் கால்களை இழந்த ஆமை ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோ (Pedro) என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த ஆமைக்கு.
பெட்ரோ ஆமைக்கு முதலில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வரும் ஜிஞ்சர் கட்னெர் (Ginger Guttner) என்பவர், பொம்மை காரின் சக்கரங்களை கொண்டு கால்களை இழந்த ஆமைக்காக வீல் சேர் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
தற்போது வீல் சேர் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆமை, வழக்கமாக ஆமைகள் நகருவதை விடவும் வேகமாக நகரும் வீடியோவை லூசியானா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.
0 Comments