ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மனிதன் நிலைவை அடைந்த சாதனையும் தாண்டி இப்போது விண்ணை தாண்டி உள்ள
அதிசியங்களை காண மனிதன் துடித்து கொண்டு இருக்கும் வேளையில் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்
மூலம் மனிதனை விண்வெளிக்கு பயணமாகும் விண்வெளி வீரர்களை தேர்வு செய்துள்ளது நாசா. கடந்த மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:
·
மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலத்தை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
·
ஏப்ரல் மாதம் கேப் கெனவெரலல் உள்ள விமானப் படைத் தளத்தில் இதன் என்ஜின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
·
சோதனையின் போது அதில் இருந்து ஆரஞ்சு வண்ணப் புகை எழுந்ததாகவும், டிராகன் ஒழுங்கற்று இயங்கியதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
·
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
·
ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் பயணிக்க விண்வெளி வீரர்களான பாப் பென்கென் (Bob
Behnken), டக்ளஸ் ஹர்லி (Duglus Hurley) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
·
இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் விண்கலம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments