மூன்றாம் பிறையுடன் ஒரு சின்ன காதல்!!




       ரவு நேரத்தின் மூன்றாம் பிறை நிலவுடன் ஒரு சின்ன காதல்.என் இரு விழியும் கொத்தி கொத்தி திண்ணும் சின்னஞ்சிறு வண்ண விண்மீன்கள். இரவு நேரத்தை ஆளும் சந்திரன். அம்மா மடியில் ஒருபிடி நிலாசோறு அது ஒரு மௌனகவிதை. சொல்ல வார்த்தை இல்லை…

   இதமாக பாடும் தென்றல் வீசும் காற்றுயுடன் மூன்றாம் பிறை நிலவுடன் எந்தன் கனவுகள் எழுதும் ஒரு மடல். கண்களில் ஒரு சின்ன ஏக்கம். மனதற்குள் ஒரு ஆனந்தம் உதடின் ஓரோம் ஒரு அழகிய சிரிப்பு முத்துப்போன்று. இதற்கு காரணம் யார் அறிவார்….வாழ்க்கையின் தேவைகள் அதிகம் அதில் ஒரு பங்கு தான் இந்த மூன்றாம் பிறை நினைவுகள் உடன் என் இதயம் எழுதும் கவிதை இது.


என் இதயத்தில் உள்ள நான்கு அறைகளும் தனிமை என்னும் ஆக்ஸிசன் அடைக்கப்பட்ட மடல் ஆகும். அந்த இரவு நேரத்தை ஆளும் நிலாவும் இந்த பாவையும் ஒன்றுதான் . துணைகள் அற்ற தூண்கள் நாங்கள்..தன் தேவைகளை துறந்த துறவிகள் என்று கூட கூறலாம்.


     இந்த பாவையின் நிலையே அறிந்து தான் வெண்ணிலா நீயும் தனிமையில் வாடுகிறயோ????வேதனை வேண்டாம் உன்னைப் போல் நானும் இருக்கிறேன். துயரங்களை அறவே ஒழித்திடு. வேதங்களை கற்ற இலக்கியம் நாம்..இலக்கு மட்டுமே நாம் இதயம் ஆகும்…இப்புவியே ஆள பிறந்தவர்கள் நாம்.நமக்கான வாழ்வு ஒன்று உள்ளது. அதை வாழிவோம் நாம்…தன்னியர்கள் அனோம் இப்போது…...
 
                                                            - இப்படிக்கு செங்காந்தள்

          
இது போன்ற கவிதைகளை படிக்க!

மரம் விடும் கண்ணீர்!!









Post a Comment

0 Comments