போர்கால நடவடிக்கைகள் என்றால் என்ன?




       போர்கால நடவடிக்கைகள் இந்த வார்த்தையினை நாம் அடிக்கடி கேட்கும் ஒரு வார்த்தை. ஆளும் கட்சியை பார்த்து  எதிர்க்கட்சி தலைவர் மக்களுக்கு போர்கால நடவடிக்கைகள் மூலம் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லுவார். ஏன் இந்த கொரோனாவின் தாகத்தினால் கூட நமது முதல்வர் போர்கால நடவடிக்கைகள் மூலம் நடவடிக்கைகள் இந்த அரசு எடுத்து வருகின்றது என்று சொல்லுவதை கேட்டு இருக்கோம், ஆனால் நம்ம மக்களுக்கு  போர்கால நடவடிக்கைகள் அப்படி என்றால் என்ன என்பதை பலருக்கும் அறியாத ஒன்றாகும். அதனை பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

போர்கால நடவடிக்கைகள் என்றால் என்ன?


நமது இரண்டு தலைமுறைகளாகவே போர்களத்தை கண்ணால் கூட கண்டது இல்லை. ஆனால் போர்களம் என்ற வார்த்தையை இன்று உபயோகித்து கொண்டு தான் இருக்கிறோம். போர்கால நடவடிக்கைக்கும், போர்களத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. அதன் அடிப்படையில் தான் போர்கால நடவடிக்கைகள் என்ற வார்த்தை இன்றும் நடைமுறையில் உள்ளது.


போரின் போது பல வீரர்களை காயம் அடைந்து இருப்பார்கள். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது செல்வது என்பது கடினம் அதனால் போர்முனையில் இருக்கும் இராணுவ வீரர்களுக்கு உணவு, குடிதண்ணீர், மருத்துவமனை  போன்ற அடிப்படை தேவைகளை எத்தனை இடர் வந்தாலும் எடுத்து செல்வதைதான் போர்க்கால நடவடிக்கைக்கு ஒரு எடுத்துகாட்டு ஆகும்.


  
 செய்யவே முடியாத  பெரிய மலைப்பான வேலைகளை தேசத்து மக்கள் அனைவரும் இன்று இணைந்து இரவு பகல் பாராமல் உழைத்து செய்து முடிப்பதும் போர்கால நடவடிக்கைகள் தான். அதுமட்டுமின்றி  போரின் போது பழுதான சாலையை  மீண்டும் சீரமைப்பது என்பது மிகவும் கடினம் அதனால் அப்போது போர்கால நடவடிக்கை தேவை.  


      அந்த போர்கால நடவடிக்கையினால் எடுக்கப்படும், அதன் பின்னர் சாலை சீர்செய்தால்தான் படை நகரும் என்பதுனால் இரவு பகல்பாராமல் மக்கள் உழைப்பார்கள். எடுத்துக்காட்டாக , நமது இந்தியாவில் நடைபெற்ற கார்கில் போரின் போது மலை பிரதேசத்தில் உள்ள நமது ராணுவவீரர்களுக்கு குடிநீர், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல பனிமலையில் உள்ள பனியை போர்க்கால நடவடிக்கையாக நீக்கி சாலையை சரி செய்வார்கள்.  அப்படி முடியவில்லை என்றால் ஹெலிகாப்டரில் சென்று தேவையான பொருட்களை கொண்டு செல்வார்கள். இதுதான் போர்கால நடவடிக்கைகள் ஆகும். போர்கால நடவடிக்கை என்றால் அவசரம் அவசரமாக என்று அர்த்தம்.




போர் வரும் போதுதான் இப்படி செய்ய வேண்டும் என்று அர்த்தம் அல்ல, இக்கட்டான சூழ்நிலையில் கூட போர்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, புயல், வெள்ளம்,சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது கூட போர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஜப்பான் நாட்டில் அடிக்கடி பூகம்பம் வரும் ஆனால் அவர்கள் பொருட்படுத்தாமல் அவ்வளவு சீக்கிரமாக சீர் செய்து. பழைய நிலமைக்கு வந்து விடுவார்கள். அதற்கு காரணம் அங்கு எடுக்கப்படும் போர்கால நடவடிக்கைகள்தான்.


தமிழ்நாட்டில்  கொரோனா தொற்றின் காரணமாக பல போர்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அவசர அவசரமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களுக்காக எடுத்து வருகிறார்கள் இதனை தான் நாம் போர்கால நடவடிக்கை என்று சொல்லுகிறோம். இனி நாம் போர்கால நடவடிக்கை என்ற வார்த்தை அர்த்தை அறிந்து கொண்டு இனி செய்திகளை பார்கலாம்.




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,













Post a Comment

1 Comments

Shatheesh C said…
தங்களது கட்டுரையில் ஆங்காங்கே சந்திப் பிழைகளும், சொற்றொடர் அமைப்பில் தவறுகளும் உள்ளன. அதனைச் சரி செய்யவும். நன்றி.