இந்திய குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் என்னென்ன ?




     டிப்படை உரிமைகள் என்பது ஒரு நாட்டின் குடிமக்கள் சுதந்திரத்துடனும், விருப்பத்துடனும் வாழ வழங்கப்படும் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் ஆகும்.அரசின் தன்னிச்சையான அதிகாரத்திலிருந்து குடிமக்களை பாதுகாப்பாக அடிப்படை உரிமைகள் பாதுகாப்பவை.

அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படும்போது, மக்கள் தீர்வு வேண்டி நீதிமன்றத்தை நாடலாம். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி மூன்றில் ஷரத்து  12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகளை பற்றி கூறுகின்றன. மேலும், இப்பகுதி சாசன ‘ உரிமைகளின் பாதுகாவலன்’ (Protector of right) எனப்படுகிறது.

  1.  சமத்துவ உரிமை  - ( ஷரத்து 14 -18)
  2. சுதந்திர உரிமை   - (ஷரத்து  19-22)
  3. சுரண்டலுக்கு எதிரான உரிமை  - (ஷரத்து  23 – 24)
  4. சமய சுதந்திர உரிமை  -  (ஷரத்து  25 – 28)
  5. கல்வி மற்றும் கலாச்சார உரிமை -  (ஷரத்து  29 – 30)
  6. அரசியல் தீர்வு உரிமை  - (ஷரத்து - 32)

       
     முன்பு அடிப்படை உரிமைகளில் ஒன்றாக இருந்த சொத்துரிமை (ஷரத்து - 31) 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 44- வது சட்டத் திருத்தத்தின்படி  அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சாதாரண அரசு சமைப்பு உரிமையாக (ஷரத்து – 300A) யில்  வைக்கப்பட்டுள்ளது.




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,







Post a Comment

0 Comments