ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு அல்ல?


          


                  இந்தியாவின் தேசிய விளையாட்டு என்னவென்று அனைவரிடமும் கேட்டால் எல்லாரும் ”ஹாக்கி” என்று தான் சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டும் அல்ல  இந்தியாவுக்கு எந்த ஒரு தேசிய விளையாட்டும் இல்லை என்பது தான் உண்மை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி:

    லக்னோவை சேர்ந்த ஐஸ்வர்யா பிரஷார் என்ற 10 வயது சிறுமி சார்பில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்தியாவின் தேசியகீதம், விளையாட்டு, விலங்கு, மலர், சின்னம் ஆகியவை குறித்த அறிவிப்புகளில் அதிகாரப்பூர்வமான நகல்களை அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
   
     இதற்கு விளக்கம் அளித்த விளையாட்டு துறை அமைச்சகம் இந்தியாவில் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை எனவும், இந்தியாவுக்கென தேசிய விளையாட்டு எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இந்திய நாட்டில் ஹாக்கியின் வளர்ச்சிப்பாதை:

         இன்று வேண்டுமானால், கிரிக்கெட் அனைவரும் விரும்பி விளையாட்டாக இருக்கலாம். ஆனால் சுதந்திரத்துக்கு முந்திய வரலாற்றில் ஹாக்கி போட்டியில் யாரும் அசைக்க முடியாத அணியாக விளங்கியது இந்திய அணி.
       
      ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி எட்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளது.  1928 முதல் 1956 வரை தொடர்ச்சியாக தங்கப் பதக்கங்களை குவித்து வலிமையான அணியாக விளங்கியது. இந்திய அணி இதனாலேயே அப்போதிலிருந்து ஹாக்கி தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என்று போதிக்கப்பட்டு வருகிறது.  நம் பள்ளி காலத்தில் நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்கள் கூட இதுதான் நமது தேசிய விளையாட்டு என சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.  இப்படியே படிப்படியாக ஹாக்கி தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என நம்பப்பட்டு வந்துள்ளது.

  ஹாக்கிகான தேசிய விளையாட்டு அந்தஸ்து: 

          இந்நிலையில் ஹாக்கியைத் தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டு என அனைவராலும் அறிவிக்கப்படும் ஹாக்கி விளையாட்டு தேசிய விளையாட்டு என இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

     ஹாக்கிக்கு நமது தேசிய விளையாட்டாகவும் கருதி உள்ளது இந்தியாவை உலகளவில் பெரும் செய்த ஹாக்கி வீரர்களுக்கு அது ஒரு மரியாதையாக இருக்கும். மேலும், எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட்டில் திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகவும் அமையும் ஆகவே தேசிய விளையாட்டு ஹாக்கி என அதிகாரப்பூர்வமாக வெளியிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.   ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இவ்வளவு நாளும் ஹாக்கி தான் இந்தியாவின் தேசிய விளையாட்டு என நம்பி இருக்கிறார் என்றால், அந்த அளவுக்கு அது உண்மை என்று நம் மனதில் காலம் காலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் இணைந்து ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து உயர்த்தி ஹாக்கி விளையாட்டில் உலக அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து வழங்குமாறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,






Post a Comment

0 Comments