ரசனையோடு மனம் விட்டு பேச தோணும் தருணம் இது இப்படிக்கு - " மழை”





மழலையான மன உணர்வை போர்த்திச் செல்லும் கார்மேகக் கூட்டத்தில் காணாமல் போகும் மனம்...

கொட்டும் மழையை கொண்டாடும் துள்ளல்
நின்றபின்னும் தூறல்தான் உள்ளமெங்கும்!!





இடியும் மின்னலும் இதழ்கூடியது போல...

பிரக்ஞையற்று
உணர்வு  சூடி
சொர்க்கம் சேரும்
பாதையில் பூ தூவும் மழையும்!!!





நாணல் மேனியவளோடு மெல்லிய நடை போடதாளமிட்டு முழக்கமிடும் இடிகளுக்கு சில நேரம் நன்றி சொல்வோரும் உண்டுஇணையவளின் 
இறுப்பால்....!

பேரழகை வானம் மட்டுமே உண்டாக்கும்..வானவில் நெஞ்சம் போல் வண்ணம் கொண்டாட!!!

வா மழையே..வா... மழையே!!





பசுமையை செழிப்பாக்கும் முத்தம் இது!!

பகலவனின் பவனிக்கு குளிர்ச்சியளிக்கும் முத்தமிது!!

இலைகளும் கிளைகளும் தடுத்தும் இறுதித் துளியானலும் வேர்கள் தேடும் முத்தமிது!!

அகடும் முகடும் விரித்து சுருங்கலானாலும் கூட எதிர்கொண்டு ஆர்பரிக்கும் அருவிகள் அணைத்து வாங்கும் முத்தமிது...

முத்தமிடல் கூட அன்புதான் என மழையிடம் முத்தங்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறது பூமி!!!


                                                      -  மழையின் சிலுங்களுடன்! சித்திரன்




இது போன்ற கவிதைகளை படிக்க!








Post a Comment

0 Comments