அவளும் மழையும்!!





மெல்லிய பாதம் கொண்டு சுவடுபதித்த அவளைத்தான் ஊடுருவிட தவமாய் தரையில் ஓடியது!!

கண்ணிமைக் காத்தாலும்,  சில துளியாவது காந்தக்கண்ணை கலவி செய்து நனைத்த கார்காலம்!!

செவிமடலோடு கரம் கொண்டு சுட்டு விரல் தீண்டி, சூடேற்ற குதுகூலமாக்கும் சாரல்களின் ஓட்டம்!!!



பொன்னிதழும் செவ்விதழாக வானவில்லின் வருகையோடு புன்னகைக்கும் !!

கழுத்தோடு சாரல் கொண்டு அணைத்து வருடியப் பின் இளைப்பாற இடம் தேடி மார்போடு மாயமாகிவிடும்...!!

குதிகால்கள் குதித்து ஆடும் அளவில் தெருவெங்கும் தேங்கி நிற்கும் சிற்றோடை போல்...!!

இடை மறித்து ஒட்டியானம் கூட    சூட்டிக்கொள்ளும்
முத்துத் துளிகளால்!!

வெட்கம் விட்டு வைக்க ஓரிடமும் இல்லை என்று முழுவதும் நீராடும்
மழையின் ஒவ்வொரு துளிகளும்...
அவளின் அழகை ஆராதிக்க!!!
   

                    -  சிரிக்கும் சிலையை கண்ட சித்திரன்


     இது போன்ற கவிதைகளை படிக்க!







Post a Comment

0 Comments