புதுச்சேரி உருவான வரலாறு ; புதுச்சேரியின் அடிப்படை தகவல்கள்



   

      புதுமையான இடத்தில் குடியேற்றம் என்னும் பொருள்தரும் வகையில் புதுச்சேரி என்ற பெயர் பெற்றது.  புதுச்சேரியின் வரலாறு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 'பெரிப்ளுஸ் ஆஃப் எரித்ரியன் ஸீ' எனும் புத்தகத்தில் பொதுக்கே எனும் சந்தை கூடும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தற்போதைய அரிக்கமேடு பகுதியில் குறிப்பிட்டிருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.


வரலாறு:


         சோழர், பல்லவர் ஆட்சியின் கீழ் இந்திய பகுதி இருந்திருக்கிறது. வரலாற்றுக்கு முந்திய கால கட்டத்தில் புதுச்சேரி சிறந்த துறைமுகமாக விளங்குவதற்கு அரிக்கமேடு சாட்சியாக உள்ளது. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி புதுச்சேரியில் 1674-ல் வியாபார நிறுவனத்தை    ஏற்படுத்தியது.1954- யில்  பிரெஞ்சு  இந்திய பகுதியில் தாயக 
இந்தியாவுடன் இணைந்தன.


 1962 ஆகஸ்ட் 16 புதுச்சேரி அதிகாரப்பூர்வமான இந்திய பகுதியானது.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 7வது திருத்தத்தின் மூலம் 1963- இல் மத்திய 
ஆட்சிப் பகுதியானது.

        1954 ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி புதுச்சேரி காரைக்கால், மாஹி, ஏனாம் இந்தியாவுடன் இணைய ஒப்பந்தமாகி, 1962 ஆகஸ்ட் 16 ஆம் தேதி புதுச்சேரி அதிகாரபூர்வமாக இந்திய அரசு பகுதியானது. தனி மாநிலமாகமல், மத்திய ஆட்சி பகுதியாக உள்ளது.

இதில் மாஹி கேரளத்திலும்,  யேனாம் ஆந்திரப் பிரதேசத்திலும் புதுச்சேரி காரைக்கால் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.


      2006 - ஆம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதியன்று பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.

புதுச்சேரியின் அடிப்படை தகவல்கள்: 






மத்திய ஆட்சி பகுதி புதுச்சேரி

புதுச்சேரியின் தலைநகர் - புதுச்சேரி

பரப்பு  -  479 சதுரகிலோமீட்டர்

மொழி – தமிழ், பிரெஞ்சு

மக்கள் தொகை – 12,47, 983 /ஒரு ச.கி.மீ

மக்கள் நெருக்கம்  - 2,598 /ஒரு சதுர கிலோமீட்டர்

ஆண் பெண் விகிதம் -  1,000 /1,037

எழுத்தறிவு விகிதம்  -  86.55%

லோக்சபா இடங்கள் - 1

ராஜசபை இடங்கள் - 1

சட்டசபைகள் -  30

உயர் நீதிமன்றம்  - சென்னை

பிரதேச விலங்கு - அணில்

பிரதேச மலர்  - நாகலிங்க மலர்

பிரதேச பறவை - குயில்

பிரதேச மரம் - வில்வமரம்

தமிழ்தாய்வாழ்த்து  - “வாழ்வினில் செம்மையைச் செய்பவள்                                  நீயே!” பாரதிதாசன் எழுதிய பாடல்          
                        
முக்கிய ஆறுகள் – செஞ்சி, மாஹி,அரசலாறு, காவேரி( கரைக்கால்                             அருகே)

சிறப்பு தகவல்கள்:

  •  மாநில முதல்வரும் அமைச்சர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்,  சட்ட ஒழுங்கு விஷயங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெற்றே ஆகவேண்டும்.


  • மூன்று  மாநிலங்களிலாக  எல்லையைப் பங்கிடும் ஒரே  மத்திய ஆட்சிப் பகுதி புதுச்சேரி ஆகும்.( புதுச்சேரி - தமிழ்நாடு, மாஹி - கேரளம்,  யேனாம் – ஆந்திரம்)
  • பிரேஞ்ச் கலாச்சாரம் நிலவி வரும் ஒரே இந்தியப் பகுதி புதிச்சேரி ஆகும்.

  •  வனபரப்பு இல்லாத பகுதி

  • இந்தியாவின் முதல் சர்வதேச நகரிகம் – (Township) ஆரோவில்.

  • இந்தியாவின் 9 மத்திய ஆட்சிப் பகுதிகள் புதுச்சேரி , டெல்லியில் மட்டுமே சட்டபெறவை  உள்ளது.

  •  இந்தியாவின் மிகச் சிறிய மாவட்டம் - மாஹி 

  • குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்கள்;  இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இந்தாலஜி,ஜிப்மர் சலீம் அலி ஸ்கூல் ஆஃப் எக்காலஜி அண்ட்  சயின்ஸ்  என்வயரான்மெண்ட் சயின்ஸ்.


 புதுச்சேரின் ஆளுநர்  -  கிரண்பேடி 


புதுச்சேரியின் முதல்வர் - நாரயணசாமி



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,











Post a Comment

0 Comments