பச்சையாக வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?




           வெங்காயம் இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ளப்படுகிறது. வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.


வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக தினமும்  வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல்வேறு நம்மைகள்  நமது உடலுக்கு உண்டு.

வெங்கயாத்தின் நன்மைகள்:

பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.


  •  சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணம் அடையும் .

  •  தேள்குளவி போன்ற விஷ ஜந்துகள் கடித்த இடத்தில் வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அழுத்தித் தேய்த்தால் வலி குறையும்.

  • மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிது.
  •  வெங்காயத்திலுள்ள கந்தகச் சத்து சிலருக்கு ஒத்து வராது.  அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம்முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.

  •  வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு.  குறிப்பாக   பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
  •  வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவுஅதனால் உடல்  பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  •  பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம்  உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறதுநாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.

  • பற்களில்குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும்அந்தக் குறைபடை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,












Post a Comment

1 Comments

No Green Onion, that means, Pachchai Vengayam. All onion colours are one type of red. Ok.