பெண்கள் மெட்டி அணிவதன் அறிவியல் உண்மை இதுதானா!




நாம் சிறு வயதில் இருந்து பார்த்து இருப்போம் திருமணத்து அன்று அம்மி மிதித்து மெட்டி அணையும் நிகழ்வினை, ஆனால் அப்போது எதற்கு இந்த சடங்கு என்று அப்போது தெரிய வாய்ப்பில்லை, ஆனால் இப்போது அனைவருக்கு ஏழும் கேள்வி எதற்கு மெட்டி அணிகிறார்கள் என்று மெட்டி அணிவது வேறும் சடங்கு மட்டுமின்றி அதில் ஒரு அறிவியல் உண்மையும் ஒளிந்து கொண்டு இருகின்றது அதனைப் பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.


நம்ம முன்னோர்கள் வெறும் சடங்கு சம்பிரதாயம் மட்டும் நமக்கு கற்று கொடுக்கவில்லை, பல அறிவில் சார்ந்த உண்மைகளை நமக்கு தெரியாமல் நாம் அனைவருக்கும் கற்று கொடுத்து உள்ளார்கள். அவற்றில் ஒன்று தான் திருமணத்தின் போது மெட்டி அணியும் நிகழ்வு. அப்படி என்ன இதில் அறிவியல் இருக்கிறது என்று ஆச்சரியம் படுகிறீர்களா !  வாங்க பார்கலாம் அறிவியல் உண்மையை!

  • பொதுவாக நமது உடலின் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் காலில் தான் இணைகிறது என்று படித்து இருக்கிறோம். அதுவும் குறிப்பாக கால் விரல் நரம்புகளுக்கும் பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் ஒருவிதத் தொடர்பு உள்ளது.


  • கால் விரலில் மெட்டி  அணிவது முக்கிய நோக்கம் கருப்பையின் நீர் சமநிலை என்றும் பாதிப்படைவதில்லை. எனவே, திருமணத்திற்கு பின்னர் பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.  

  • அதில் முக்கியமாக மெட்டியும் வெள்ளியில் செய்ததாக இருக்க வேண்டும். ஏன் என்றால் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றல் கொண்டது.


  • பெண்களின் கர்ப்பக் காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும்.

  • மெட்டி போட்ட பெண்கள்  நடக்கும்போது இயற்கையாகவே  மெட்டியினை பூமியில் அழுத்தி உராய்ந்து வலியைக் குறைக்கிறது.


  • காலில் மெட்டி, கொலுசு போன்ற அணிகலன்கள் அணிவதின் முக்கிய நோக்கம் கருப்பைப் பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பதிற்காக நம் முன்னோர்கள் இந்த பழக்கத்தை உருவாக்கி இருக்கின்றனர் என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.  



இது போன்ற சுவாரசியமான தகவலை காண,


வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்துவது எப்படி? (HOW TO INCREASE POSITIVE ENERGY IN OUR HOUSE)


இந்து மதம் உருவான வரலாறு?


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,







பகலில் ரோஜா சிவப்பு நிறத்திலும், புல் பசுமை நிறத்திலும் காணப்படுவது ஏன்?













Post a Comment

1 Comments

Harish said…
Good information