கொரோனாவிற்கு மருந்து கண்டு பிடித்து விட்டார்கள்!





கொரோனா தாகத்தில் இருந்த உலக மக்களுக்கு ஒரு நற்செய்தி கொரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க அமெரிக்க மருந்து நிறுவனம் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்து இருகின்றது. அந்நிறுவனம் தெரிவித்தது ரெம்டெசிவிர் என்ற மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் கூறியுள்ளது.


உலக முழுவதும் கொரோனாவின் கோரதாண்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், பல உலக நாடுகளில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக உலக வல்லரசு நாடான அமெரிக்காவை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த ஆராய்ச்சியில் பல பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது


அமெரிக்க நிறுவனம் மேற்கொண்ட ஆய்வியில் ரெம்டெசிவிர் எனப்படும் மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தெரிவித்துள்ளது. இந்த நற்செய்தியை கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நற்செய்தியை பற்றி கலிபோர்னியா மருந்து நிறுவனம், ‘கொரோனா நோயாளிகளுக்கு வைரஸ்க்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது என்றும் முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றும் ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது என்று கூறியுள்ளது.

 இந்த மருந்து ஆய்வு குறித்த முடிவுகளை அமெரிக்க நாட்டில் உள்ள அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஏஐடி) மதிப்பீடு செய்து தகவல் வெளியிட்டுள்ளது.  அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் மற்ற மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

மேலும், மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும்போது சராசரியாக 15 நாட்களில் நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளி குணமடைந்துள்ளார் என்றும் என்ஐஏஐடி  நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

என்ஐஏஐடி நிறுவனத்தின்  தலைவர் அந்தோனி பாயுசி அவர்கள் நோயாளிகளை மீட்பதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெம்டெசிவிர் ஒரு தெளிவான, குறிப்பிடத்தக்க, நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன என்று தெரிவிக்கிறார். குறிப்பாக 31 சதவிகித முன்னேற்றம் என்பது, 100 சதவிகிதம் நாக் அவுட் போல் தெரியவில்லை என்றாலும், தற்போதைய முன்னேற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த மருந்தால் வைரசை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.


நோயாளிகளுக்கு கொடுக்கும் சோதனை முயற்சி பிப்ரவரி 21ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1,063 பேருக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை பல செய்யப்பட்டிருக்கிறிது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவை குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்தார்கள்.


இது உறுதியான தகவல் அல்ல...தடுப்பு மருந்தும் அல்ல... கட்டுப்படுத்த பரிசோதனை முறையில் கொடுத்தது மட்டுமே உண்மை

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




Post a Comment

0 Comments