புவிசார் குறியீடு (geographical indication) என்றால் என்ன?





       புவிசார் குறியீடு ஆங்கிலத்தில் (geographical indication) என்று சொல்லக்கூடிய புவிசார் குறியீடு என்பது இந்தியா முழுவதும் பல்வேறு பிரசிதிப்பெற்ற பொருள்களுக்கு வழங்க கூடிய குறியீடுதான் புவிசார் குறியீடு .



மிகவும் துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு பொருளின் தரம் நம்பகத்தன்மை உடையை பொருட்களுக்கு குறிப்பிட புவிசார் குறியீடு அளிக்கப்படுகின்றது. அந்த வகையில் தமிழகத்திலும் பல பொருள்கள் பாரம்பர்யமும் தனித்தன்மையும் கொண்டு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது அவை என்னவென்று பார்க்கலாம்.

தமிழ்நாட்டிற்கு 2019-ல் மட்டும் 7 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவை ஈரோடு மஞ்சள், திருபுவனம் பட்டு, கொடைக்கானல் மலைப் பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட 7 பொருள்களுக்குக் கிடைத்துள்ளது.


அது மட்டுமின்றி தஞ்சாவூர் ஓவியம், மதுரைச் சுங்கடி, நாகர்கோவில் நகை என்று பல பொருள்களுக்குப் புவிசார் குறியீடு கொடுத்துள்ளனர். தமிழகத்திற்கு இது வரை 44 புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளது.

புவிசார் குறியீடு பெறுவதால் அப்படி என்ன நன்மை உள்ளது என்று கேட்கலாம். ஆம் நன்மை உண்டு அது என்னவென்றால் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு என்றும் சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது , அதுமட்டுமின்றி பல போலிகளை தவிர்க்க முடியும். சிறு தொழில் பெருகி பெரிய தொழிலாக மாறும், எளிதில் விளம்பரம் கிடைக்கும். 

தொழிலாளர்கள் நலன் பெறுவார்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட பொருள்கள் குறித்து ஆராய்ச்சி செய்யலாம் இப்படிப் பல்வேறு நலன்களைப் புவிசார் குறியீடு நமக்கு வழங்குகிறது. இவை தமிழ் நாட்டில் அதிகம் பெறுவதால் தமிழ் நாட்டின் பெருமை உயரும்.




இது போன்ற சுவாரசியமான தகவலை காண,









Post a Comment

0 Comments