மரம் விடும் கண்ணீர்!!



                  


              

                                 இயற்கை கடவுள் கொடுத்த அதிசயம்.நாம் இரசிக்க மறந்த அதிசியம். இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் தான் என்னும் மடையன் தான் மனிதன் ஆவான். ஆடு, மாடு கூட புற்களை வேர்வுடன் மேய்வது இல்லை என் என்றால் அவை மறுநாள் வளரும் என்று. ஆனால் மனிதர்கள் ஆகிய நாம் இப்புவில் இருக்கும் மரங்களை அழித்து கொண்டு அதில் மேல் கட்டிடங்கள், தொழிற்சாலைகளை கட்டிக்கொண்டு இருக்கிறோம்.


இந்நிலத்தை நசம்படுத்துகிறோம். மரங்களை நாம் நாட்டு வைக்க வேண்டாம். வெட்டாமல் இருப்பது நன்று. இயற்கையே கண் போன்று பேணி காக்க வேண்டும்.

இவ்வுலகத்தை நாம் ரசிக்கலாம், அனுபவிக்கலாம் ஆனால் உரிமை கொண்டடா கூடாது. நிலங்களை ஐந்தாக பிரித்து வாழ்ந்த மண் இது. இன்று புல்வேலிக் கூட காண இயலவில்லை காரணம் கேட்டால் நாகரிகம் என்ற கூச்சல். நெல் விளைந்த பூமியில் நெகிழிகள் புறண்டுக்கொண்டு இருக்கிறது. பறவைகள் கொஞ்சி விளையாடிய நீர்நிலைகள் எங்கே????மாமரங்களும், சாமரங்களில் கூவும் குயில்கள், கரையும் காகங்கள் காண முடிக்கிறதா இன்று……சிறகுகள் ஊலுக்கும்…சிட்டுக்குருவி எங்கே போயிற்று????? செம்பழங்களை கொறிக்கும் ஆணில்கள் எங்கே?? மழைக்கு தூது போகும் தும்பி காண்பது உண்டா??? மனம் மகிழும் பட பட பல்லாங்குழி ஆடும் பட்டாம்ப்பூச்சி ஒடியது எங்கே?????



இன்று அனைத்தும் தொலைத்து கண்ணிர் விட்டு காலங்களை கழிக்கும் மனிதர்கள்.. காலங்கள் செய்த சோதனைகள் இல்லை நாம் செய்த வினைதான் இது….இன்று அதை அனுபவித்து கொண்டு இருக்கிறோம்… கொலுத்தும் வெயிலில் குடை தேடுவது போல் மரங்களை நாம் தேடுகிறோம். ஆனால் நாம் மலர்களை நெசிக்கும் மனிதர்கள்…மரங்களை நட்டது உண்டா…..புத்தர்க்கு ஞானம் கிடைத்தது போதி மரத்தில் தான் …அதை தெரிந்தும் மரங்களை வெட்டும் மாமனிதன் தான் நாம் மக்கள்..


இந்த இப்பூஉலகத்தில் பிறந்த அனத்து உயிரினங்களும் இயற்கைக்கு சேவை செய்க்கின்றது…. தேனீகள் முக்கிய பங்கு ஆற்றுக்கிறது மகரந்த செயர்க்கைக்கு உதவுகிறது. பல பறவைகள் தன் எச்சில் மூலம் பல வகை காடுகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இயற்கையே கண் போன்று பேணிகாக்க வேண்டிய நாம் அதை அழித்து கொண்டு இருகிறோம்…. மரங்கள் அழிந்து கொண்டு கண்ணீர் விடுக்கிறது….


                                                                                                                     - இப்படிக்கு செங்காந்தள்



இது போன்ற கவிதைகளை படிக்க!

மழையின் தாகம்!!







Post a Comment

0 Comments