நியூட்டனின் இயக்கவிதிகள் என்றால் என்ன?







நியூட்டனின் இயக்கவிதிக்கான முதல் விதி:

புறவிசைகள் செயல்படாத நிலையில் ஒய்வு நிலையில் உள்ள பொருள் தொடர்ந்து ஓய்வு நிலையிலும், இயக்க நிலையில் உள்ள பொருள் ஒன்று சீரான இயக்க நிலையிலும் இருக்கும். பொதுவாக பொருளின் இப்பண்பு நிலைமம் எனப்படும். எனவே, நியூட்டன் முதல் விதியை நிலைம விதி என்கிறோம்.

எடுத்துக்காட்டு:

மேஜை மேல் உள்ள ஒரு பொருள் மீது புறவிசைகள் செயல்படாத வண்ணம் அப்பொருள் மேஜை மேல் அப்படியே தான் இருக்கும் இதற்கு பெயர் தான் நியூட்டனின் இயக்கவிதிக்கான முதல் விதி அல்லது  நிலைமம் எனப்படும். இதனை சடத்துவம் என்றும் கூறலாம்.

நியூட்டனின் இயக்கவிதிக்கான இரண்டாம் விதி:
நியூட்டனின் இயக்கவிதிக்கான இரண்டாம் விதி என்பது, உந்த மாறுபாடு வீதம் சம்மற்றா விசைக்கு நேர்த்தகவில் அமைவதோடு அவ்விசையின் திசையிலேயே செயல்படுவதமான ஓர் எதிர்வினை உண்டு.
எடுத்துக்காட்டு:

F=ma (Force = mass X acceleration)

நியூட்டனின் இயக்கவிதிக்கான மூன்றாம் விதி:

நியூட்டனின் இயக்கவிதிக்கான மூன்றாம் விதி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், இந்த விதியின்படி, ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்த்திசையில் செயல்படுவதமான ஓர் எதிர்வினை உண்டு.

எடுத்துக்காட்டு:

துப்பாக்கி சூடும் போது தொட்ட முன்னோக்கி செல்லும் அதே அளவு துப்பாக்கி பின்னோக்கியும் நோக்கி நகரும் இதுதான் ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு. இதனை தான் நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி கூறுகின்றது.


மேலும்இது போன்ற அறிவியல் தகவலை காண,


























Post a Comment

0 Comments