கொரோனாக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தது இஸ்ரேல் ஆராய்ச்சி நிறுவனம்!




கொரோனாவிற்கு முடிவு கட்டி தடுப்பு மருந்தை கண்டுபிடித்த இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம். இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில்  கொரோனா தொற்றுக்கு ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது கொரோனா தொற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட்  பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு நேற்று சென்றார், அப்போது அங்கு கொரோனா தொற்றுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து  விளக்கினார்.

 பென்னட்   ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டி, இந்த பயங்கர முன்னேற்றத்திற்கான நிறுவன ஊழியர்களைப் பற்றி  பெருமையாக கூறியுள்ளார். மேலும், படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்தது என்று கூறினார்.



இஸ்ரேல் நாட்டு பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான ..பி.ஆர்-ல் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா தொற்று அழிக்க முடியும் என்றும்.

ஆன்டிபாடி செய்முறை காப்புரிமை பெறுகிறது என்று ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறினார். அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments