பூண்டு சூப் செய்யும் முறை



தேவையான பொருட்கள்:
  • முழுப்பூண்டு & 2
  • வெங்காயம் & ஒன்று
  • தண்ணீர் & அரை லிட்டர்
  • மைதா & ஒரு டே.ஸ்பூன்
  • பால் & ஒரு கப்
  • கெட்டித்தயிர் & சிறிதளவு
  • ஆலிவ் எண்ணெய் & 1 டே.ஸ்பூன்
  • மிளகுத் தூள், உப்பு & தேவை அளவு.





செய்ணிமுறை : பூண்டை தோல் உரித்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மைதாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய்ணி ஊற்றி சூடானதும், உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும். இதில் சிறிது எடுத்து தனியே வைத்து கொள்ளவும். அடுத்து அதில் நறுக்கிய வெங்கயத்தை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வறுத்த மைதாவையும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டியில்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும். பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி,தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.சத்தான பூண்டு சூப் ரெடி. சூப்பரான சத்தான கோதுமை கேழ்வரகு அடை ரெடி.

Post a Comment

0 Comments