யார் இவள் ???? வைகாசி
மாதத்தில் இவ்வுலகத்தை ஆள பிறந்தவள் என்று
தெரியமால் இவள் தாய் பெற்று
எடுத்தல். பெண் இனத்திற்க்கு பெருமை
சேர்க்க நினைக்கும் இவள்! அழுகை
அன்று தொடங்கியது அமுதமாய்
ஒலித்தது. இவள் பிஞ்சு விரல்
இப்புவியை தொட ஆசைப்பட்டது. காலங்கள்
மெல்ல நகர்ந்து. பாவை பருவம் அடைந்தாள்.
கல்வி என்னும் கண்கள் திறந்து.
இவள் தாய் மொழி “”தமிழ்””
என்னும் விதை விதைக்கப்பட்டது. அன்று
விதைக்கப்பட்ட விதை முளைக்க தொடங்கியது.
கற்பனைகள் தோன்றின, கனவுகள் மலர்ந்து. நூல்களில் நுணுக்கங்கள் கற்றால். பாரதின் மீது காதல்
பூத்தது. கவிதையில் கல்லறை கட்டினால். இயற்கையே
இதயம் என்று வாழ்ந்தாள். தென்றலுடைய
அரவனைப்புடன்.
கடல் அலைகளில் இவள் ஆசைகளை மிதக்க விட்டு. தனிமையே அதிகம் விறும்பினால் கண்களில் சாதிக்கனும் என்ற இதய துடிப்புடன் வாழ்ந்தாள்.
கற்பனையில் அதிகம் வாழ்ந்தாள்.
கனவுகளில்
கல்லைணைக்கட்டினால், எண்ணங்களை ஏணியாக்கினாள்
வெற்றி என்னும் வேதத்தை அடைய
ஆசைப்பட்டாள். கலையும்,
நெறுப்பும் கலந்த இவள் என்
இப்படி முள்ளில் மட்டிய மீன் போன்று
துடித்து கொண்டு இருக்கிறாள். ஏன்
இவளுக்கு இந்த கோவம் ??????
“அதரவு
அற்ற இவள் அனதை ஆக்கப்பட்டால்
அன்று இவளைப் பெற்றதாயால்.
ஆம்…..
இவள் ஒரு அனாதை பெண்.
பெண்களாய் பிறப்பது மாதவம் செய்திட வேண்டும்
என்று பாரதி பாடினார். அனால்
இவள் சப்பிக்கப்பட்டவள்.
கொடுமைகளையும்,
துன்பங்களையும் அனுபவித்து கொண்டு இருக்கிறாள். இவள்
கண்ணில் வழிந்த கண்ணீர் தான்
கடலில் கரைந்ததோ கடல் முழுவதும் உப்பு
கரிக்கின்றதோ…. ஏன் இவளுக்கு மட்டும்
இவ்வளவு சோதனையும், வேதனையும் இத்தான் இவள் விதியா
?????
நம்மை வியக்கத்தில் ஆக்கும் இவள் கதை…””யார் இவள்”” கண்களில் சிறுகண்ணீர் துளி, மனதில் வேதனையும் கொண்ட இவளுக்கு என் இந்த கதி. காலங்கள் தான் கதை சொல்ல வேண்டும் இவள் கதை எனவென்று????? இவ்வளவு சோதனைகளையும் சாதனையாக்க ஏங்குகிறாள் இந்த பாவை. பனித்துளியில் பயணம் செய்ய துடிக்கிறாள், விண்மீங்களை வீணையாக்கி யாசிக்கன்றாள், சூரியனை சுட்டு எரிக்கிறாள் அவள் கண்காளால்….
ஏன் இவளுக்கு இந்த கோவம், யார்
மீது இவளுக்கு?
கோவம்,
சமூகத்தின் மீதா இல்லை இவளை
பெற்ற தாய்யின் மீதா?????? இவள் அனாதை ஆனதற்க்கு யார்
காரணம்??????இது தொடக்கமா…………………………………………………
இல்ல முடிவா….. இவள் கற்பனை தொடரும்………………………………………………………………………
- இப்படிக்கு செங்காந்தள்
0 Comments