என்னவனை தேடி? ஒரு கவிதை மடல்!





என் ஆசைகள் தவறு  இல்லை!!   பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் பூக்கும் குறிஞ்சி மலர்களின் மீது தாவறா ?? கவிதையில் காவியம் தீட்டும் காதல் நான் …… என் பாரதி விதைத்த விதை  நான் ..உலகத்தை என் அன்பால் ஆள பிறந்தவள் நான். என் பெண்மையயை ஆளா பிறந்த தேவன் எவனோ!!! புயல் மாதரி என்னை தேடி வருவான்… பூங்காற்றை பரிசளிப்பான் அவன் ……..என் தாகம் தணிக்க தலைவன் வருவான் …வாதம்  வேண்டாம்., வாகை மலர் சுட வட்டம்  இட்டு வருவான் என் தேவன்.




         இந்த தேவதையின் தேவையை  அறிந்தவன் அவன்.  என் கார்கூழ்லில் சுடும் செங்காந்தள் பூக்களுக்கு சொந்தகாரன் அவன். என் சலங்கை ஓசைக்கு பாட்டு இசைக்கும் தலைவன் அவன்.


அவனை கண்டால் அச்சம்  கூட அனிச்ச மலராக மலரும். வீரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்னின் வாளுக்கு பிறந்தவன்.  என் பாரதின் கோவத்தில் வளந்தவன். எத்திணையை  சேர்ந்தவன் என் தேவன். குறிஞ்சி மலர்கள் பறிக்கும் மலையில் வாழ்பவனா???? இல்லை அவன் பதம் பட்டல் பாலையுலும் ரோஜாகள் மலரும்  பாலை நிலத்தவனா????? வயல்களிலும் வரப்புகளிலும் வாழ்க்கையே வாழும் மருதம் நிலத்தின் மைந்தனா?????  நெய்தலின் கடல் ராசாவா??????????? காட்டில் மலரும் முல்லை அரும்பில் மலர்ந்த மாணிக்கமா??????? யார் அறிவாரோ????  இந்த பாவையின் காதலனை??????





கண்ணகி போன்று கோவம் ஒருபுரம்  சீதை போல் பொருமையுடன் தேடிக்கொண்டு இருக்கிறன் என் ராமனை.....ராதை மனதில் கண்னனின் புல்லாங்குழல் ஓசை பாய்ந்தது போல் நான் இன்று என் கண்னனை தேடி கொண்டு இருக்கிறேன் எங்கே அவன் இருக்கிறன் என்று…. மீராவை போல் காத்துகொண்டு இருக்கிறேன் அவனுக்காக என் செவிக்கு சேவை செய்யவனா…கண்களுக்கு விருந்து அளிப்பனா,,,இல்லை வேதனை தான் வாழக்கையா????




ஆதவனை கண்ட செந்தாமரை இதழ்கள் மலர்ந்தது போல் என் மன்னனை கண்டு என் மனம் மலரும் நாள் என்னளோ???? பட பட வென பறக்கும் பட்டாம்பூச்சு பல்லாங்குழி ஆடுதடி… தூரலுக்கு  துதூ போகும் தும்பியே…என் ராமன் எப்போது வருவான் என்று அறிவயோ????? தேய்பிறை போல் தெய்ந்து கொண்டு இருக்கிறன் இந்த பாவை……….என் இராமன்க்காக இந்த பாவை தவம் செய்துக்கொண்டு இருகிறேன்….விரைவில் என் அருகில் வா என் ராமா????






















ராகங்கள் மறந்து இந்த ராதை பாடும் பாட்டு கேட்கவில்லையோ???? என் கண்ணா???? என் கவிதை மழையில் நனைய வருவயா??? ஒரு நாள் வண்ண மாலை சூட வருகிறேன் என்  காதல் ஆசையை எனக்காக கண்டிபாக வருவான் எனக்கு தெரியும். இந்த தேவதைக்காக வாழ பிறந்தவன் என் தலைவன். அவனே என் தேவன்!!  குறிஞ்சியின் தலைவனா! மருதத்தின் மைந்தனா! முல்லையின் முதல்வனா! நெய்தலின் நாயகனா! பாலையின் பாலகனா!!


                                                                                                          - இப்படிக்கு செங்காந்தள்



இது போன்ற கட்டுரைகளைப் படிக்க!!
                                      






Post a Comment

0 Comments