அந்த இயற்கை என் மேல் காதல் கொண்டால் அடி என்னடி செய்வேன் நானும்!!!

        இயற்கை ஒரு அழகிய விதவை!! ரசிக்க மறந்த மனிதர்கள் மத்தியில் வாழும் தேவதை. தேடுதல் குறைந்தாலும் அள்ளி அள்ளி கொடுக்கும் மனம் கொண்ட மகாலட்சுமி தாய்.


Image result for natural tree images hd

              இயற்கை பஞ்ச பூதங்களால் ஆனது. பஞ்ச மா பாதகங்கள்  செய்வோரை அழிக்க வல்லது நிலம்,நீர்,காற்று,ஆகாயம்நெருப்பு ஆகியவை பஞ்ச பூதங்கள் என்பது நாம் அறிந்ததே வயிற்றுக்கு உணவு கிட்டா  வேளையிலும்,சுட்டெரிக்கும் சூரியனால் நா வறண்ட போதிலும் மழையாய் நீர் தந்து வயிற்றுக்கு பால் வார்க்குது

நீரால் முப்பாகம் சூழ்ந்த போதும்,இறந்து போகும் வரை இருந்து வாழ நிலமாய் நிற்குதுஉழைக்க பகலையும்,ஓய்ந்து உறங்க இரவையும் ,ஆகாயத்தில் தந்தது!!

,தீயவைகளை,பழையதை எரிக்க,சமைந்த பெண்ணோ, சமையாத பெண்ணோ ஊனுக்கு உணவு சமைக்க நெருப்பாய் நின்றது, செடியாய்,மரமாய் நச்சுக் காற்று உட் கொணடு நாம் உயிர் வாழ நல்ல காற்று தந்தது, இப்படி இயற்கை நமக்கு நல்லது செய்ய ,நாம் அதை தெய்வமாய் வணங்கி மகிழ்வோம் மாறாக, நாம் அதன் தன்மையை சிதைத்தால்ஆழிப் பெருங்கடல் சினந்து சுனாமியாக,காற்று மன அழுத்தம் கொண்டு புயல் காற்றாக மாறி ,அதன் விளைவில் பெருமழையாகி,.
Related image



பூமி கோபம் கொண்டு சிறிதே சிலிர்த்ததில் பூகம்பமாக, பொறுத்துப் பார்த்து ,வெறுத்து போய் எரிமலை நெருப்பாகமழையாய் பொழிந்து மகிழ்வித்த வானம்,மனம் வெறுத்து இடியாய்,மின்னலாய்இறங்க, மனித குலம் தாங்குமா? யோசியுங்கள்கொத்துக்கொத்தாய் செத்து அழிவதை விட,இயற்கையை ரசித்து,அனுபவித்து அழகாய்  வாழலாம்.அழிவைத் தவிர்க்கலாம்!

- இப்படிக்கு செங்காந்தள்


Post a Comment

0 Comments