மது அருந்துவதால் கொரோனா தொற்று வராதா? அறிவோம் அறிவியல் உண்மையை?



            லக
முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவின் கோரதாண்டவம் அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில், அதற்கான தடுப்பு மருந்துகளும் பல நாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் இடுப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் சிலர் மது அருந்துவதால் கொரோனா வைரஸ் கிட்ட கூட நெருங்காது அதுவும் ஆல்கஹால் தானே என்ற செய்தியினை பரப்பி வருகின்றார்கள். இது உண்மையா? என பலருக்கும் கேள்வி எழுந்து இருக்கும். வாங்க பார்க்கலாம் மது அருந்துவதால் கொரோனா வைரஸ் தடுக்கின்றதா என்ற அறிவியல் உண்மையை அறிவோம்.  

 

மதுவிற்கும் கொரோனாவிற்கு என்ன சம்பந்தம்:

மது அருந்துவதால் கொரோனா தொற்று வராது என்ற வதந்தி அதிகமாக பலரும் பகிர்ந்து வருகின்றார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல் மட்டுமின்றி மிகவும் தீங்கு விளைவிக்கும் வாய்ப்பாகவும் அமைக்கின்றது.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரான  இருக்கும்பரத் சிங் அவர்கள் இந்த ஊரடங்கில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்றும் ஆல்கஹால் மூலம் கையை சுத்தம் செய்தால் கொரோனா வைரஸை அகற்ற முடியும் என்றால் அவை தொண்டையில் குடிக்கும் போது வைரஸ் மது பிரியர்களின் கிட்ட கூட வர முடியாது என்ற கூற்றை ஒன்றை அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தகவலுக்கு எவ்வித மருத்துவ ஆதாரம் இல்லை என்பது உண்மை.

உலக சுகாதார நிறுவனம் தெரிவிப்பது:

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், மது அருந்துவதால் கொரோனா தொற்று வராது என்ற கூற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும். மது அருந்துவதால் உடலில் பிறப் பிரச்சனைக்கு வழி வகுக்கும் என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது.

அறிவியல் உண்மை:

ஆல்கஹால் என்பது அனைத்தும் ஒரே மூலக்கூறுகள் அல்ல. நமது கையை சுத்திகரிக்கும் ஜெல்களில் கலந்திருக்கும் ஆல்கஹாலின் பயன்களை பற்றிய விளக்கங்களை குறித்து மட்டுமே உலக சுகாதார நிறுவனமும், பிற அதிகாரபூர்வ அமைப்புகளும் தெளிவுப்படுத்தியுள்ளன.

 

Post a Comment

0 Comments