நமது தேசிய சின்னத்தில் என்னென்ன விலங்குகள் உள்ளன தெரியுமா?



நமது  இந்திய நாட்டில் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று இந்திய தேசியச் சின்னமாக (National emblem) அறிவிக்கப்பட்டது. நமது தேசிய சின்னம் அசோகரின் சாரனாத் சிம்மத் தூணில் இருந்து பெறப்பட்டது.

 தேசிய சின்னத்தில் அபாகஸ் சென்ற வட்ட வடிவ பீடத்தின்மேல் ஒன்றுக்கொன்று முதுகுப்புறமாக அமைந்து 4 சின்னங்களின் சக்தி, தைரியம், பெருமை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை கூறுகின்றனர். இந்த தேசிய சின்னத்தை நாட்டின் தேசிய அடையாளமாக தேர்ந்தெடுத்த பெருமை நேருவுகு உண்டு.

 1950 ஆம் ஆண்டு  மாதவ் சானே (madhev sawhney) தேசிய சின்னத்தை வடிவமைக்க  சாரநாத் சிம்மத் தூணை மாதிரியாக ஏற்றார். தேசிய சின்னத்தில் உள்ள நான்கு சின்னங்களில் மூன்று சிங்கங்கள் மட்டுமே கண்ணிற்கு  தெரியும் பின்னால் இருக்கும் சிங்கம் பார்வைக்குப் புலப்படாது.

பீடத்தின் நடுவே தர்மசக்கரம் (wheel of law) அமைந்துள்ளது. சக்கரத்தின் இடதுபுறம்  சீறிப்பாயும் குதிரையும், வலதுபுறம்  காளையும், இரு புறங்களிலும் தர்ம சக்கரத்தின் சிறு பகுதிகள் தெரியுமாறு பொறிக்கப்பட்டுள்ளது.சாரநாத் சிம்மத்தூணில் இருக்கும் தாமரை, யானை நம் தேசிய சின்னத்தில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,














Post a Comment

0 Comments