மனம் உடைந்து இருப்பவர்களுக்கு? வாழ்க்கை என்றால் என்ன?



        வாழ்க்கை ரொம்ப அதிசயம், சுவாரசியம் மிகுந்த ஒரு காந்தம் தான். அடுத்த நொடி ஒளித்துவைத்து இருக்க அர்புதமும், ஆனந்தமும் எதுவும் யாரலும் அறிய இயலாத ஒன்று தான். வாழ்க்கை பல வண்ணம் கொண்ட வானவில் போன்றது அதை ரசிச்சி தான் வாழ வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்கு வீழ்வதற்கு அல்ல. வலிகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் அனைவருக்கும் வாழ்வதற்கான வழியும் உண்டு. அதை காண காலம் தான் கதை சொல்லும் கவலையில் கண்ணீர் கடலாகும்.

 

காலங்கள் காயத்தை மாற்றும், மாற்றமே நிலையானது இதை  அறிந்தவர்கள் வாழ்க்கைய வாழ கற்று கொள்கிறார்கள். வாழ்க்கையும் வானமும் ஒன்று தான் கண்ணிரும், கஷ்டமும் போல பல நேரம் கதிரவனின் ஒளி வீசுகிறது. சில நேரத்தில் இடியும், மின்னல் போன்ற துன்பமும் வாழ்க்கையில் உள்ளது. எப்பவாது வானில் வானவில் தோன்றுவது போன்று இன்பமும் வாழ்க்கையில் உறவாடுகிறது.


 ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் இருட்டை பற்றி கவலை பட்டு கொண்டு இருந்தால் அவனுக்கு வெளிச்சத்தின் சக்தியினை உணர முடியாது. முட்களுக்கு பயந்தால் ரோஜா மலரை பறிக்க முடியுமா என்ன? வாழ் நாள் முழுவதும் ஒருவன் வீணையை சுமப்பதினால் அவன் இசையை கேட்க முடியாது. இசை என்பது வீணைக்குள் இல்லை அந்த வீணையை வாசிப்பதனால் மட்டுமே இசை அதற்குள் இருந்து வெளியே வரும். இப்படி பலரும் வாழ்க்கையினை கையில் வைத்து கொண்டு இசைக்கு ஏங்கி கொண்டு இருகிறார்கள்.


வானம் ஒரு திறந்த நுலகம் தான் அதை படிக்க தெரிந்தவர்கள் இவ்வுலகில் குறைவு தான். வலிகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் வாழ்வதற்கு வானம் விடை சொல்லும். வாழ்க்கையில் சில கேள்விகளுக்கு பதில்கள் எளிதில் கிடைப்பது இல்லை. அந்த விடை கிடைத்ததும் வாழ்க்கை விட்டு விலகிவிடுறோம். இது தான் வாழ்க்கை.

       - இப்படிக்கு செங்காந்தள்


இது போன்ற கவிதைகளை படிக்க!

குறிஞ்சியின் காலை பொழுது!!

மூன்றாம் பிறையுடன் ஒரு சின்ன காதல்!!








Post a Comment

0 Comments