தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு! டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்க அனுமதி!



தமிழகத்தில் ஊரடங்கு 17-ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டு இருக்கும் வேளையில், வரும் 11-ந்தேதி முதல் டீக்கடைகள் மற்றும் தனிக்கடைகள் குறிப்பிட்ட நேரத்தில்  தமிழக முழுவதும் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக முழுவதும் மே 17-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இடங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.  இதற்கிடையில் தமிழகத்திலும் அனைத்து பகுதிகளிலும் டீக்கடைகளை திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழ அரசின் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், அத்தியாவசிய பொருட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என்றும் பிற தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளிலும், (நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) டீக்கடைகள் வரும் 11-ந்தேதி முதல் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பார்சலுக்கு மட்டுமே அனுமதி. டீ கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர்த்து  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும்  பெட்ரோல் பங்குகள்  காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணிநேரமும் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சென்னை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னை  தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்த பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவிகித பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இவை அனைத்தும் நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளது.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,












எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?




Post a Comment

0 Comments