சீனாவின் உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா பரவியுள்ளது – ஆதாரத்துடன் நிறுப்பிக்கும் டிரம்ப்




அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் கொரோனா வைரஸ் என்பதை சீனா வைரஸ் என்றுதான் அழைத்து கொண்டு இருகிறார். இந்நிலையில், சீனாவி உள்ள உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவி உள்ளது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ திட்டவட்டமாக தெரிவித்தார்.


சீன நாட்டின் உகான் என்ற நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தனர். ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது சீனாவின் உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, என்று பல செய்துகள் அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது. இந்த செய்தியினை அமெரிக்க டெலிவிஷன் (பாக்ஸ் நியூஸ்) பரபரப்பு வெளியிட்டது.

இதனையடுத்து உலக நாடுகள் இணைந்து கோரிக்கை வைத்தனர். பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார். மேலும், அந்த ஆய்வுக்கூடத்துக்கு அளித்து வந்த அமெரிக்க நிதியை டிரம்ப் அதிரடியாக நிறுத்தினார். பின்னர் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கட்டுபாட்டில் இருப்பதல் அவர்கள் சீனாவிற்கு சாதகமாக செயல்படுகின்றனர் என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அமெரிக்க அதிபர். இதற்கு பதில் அளித்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ், உகான் வைரலாஜி இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் கொடுத்தால் வரவேற்போம் என்று கூறிய உள்ளது.

இந்த நிலையில், உகான் வைரலாஜி இன்ஸ்டிடியுயூட்டில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதற்கிடையில், பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் சேனலுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அளித்த சிறப்பு பேட்டியின்போது கொரோனா வைரஸ் தொற்றினால் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்து விட்டனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்து முடித்திருக்கிறோம். அமெரிக்காவில் இப்போது நடந்திருப்பது, இங்கு நடந்திருக்கக்கூடாதது என்று மிகவும் கோபத்துடன் தெரிவித்தார்.

இதற்கு முக்கிய காரணம் சீனாதான் என்றும், உகான் நகரில் இருந்து வந்ததுத்தான் என்பது எங்களுக்கு தெரியும் என்றும் இது குறித்து சீனர்களுக்கு குறைந்தபட்சம் டிசம்பரில் தெரிந்துவிட்டது என்று கூறினார். ஆனால் அவர்கள் போதுமான அளவுக்கு இதில் செயல்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் தூண்டுதல்பேரால், அதை உலகளாவிய தொற்றுநோய் என உரிய நேரத்தில் அறிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், வைரஸ் குறித்திய தகவல்களை நாங்கள் சேகரித்து வைத்து கொண்டு இருகிறோம் என்று டிரம்ப் நிர்வாகம் அறிந்துள்ளது. இது தொடர்பாக உளவுத்துறை தகவல்கள் எங்களிடம் கொடுத்துள்ளது. இப்போது எதுவும் கூற இயலாது என்றும் அதனை நாங்கள் எப்போது தர வேண்டுமோ அப்போது கொடுக்கிறோம் என்று கூறியுள்ளது.

இந்த கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சரியான முடிவை வழங்காதபோது, அந்த அமைப்புக்கு பல கோடி பணத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அமெரிக்கா என்றும் உலக மக்களின் நலனை பேணி காக்கும் என்பதௌ உறுதியாக உள்ளது என்று அமெரிக்க ட்ரம்ப் நிறுவம் தெரிவித்துள்ளது.

இது போன்ற சுவாரசியமான தகவலை காண,










எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?






Post a Comment

0 Comments