கொரோனா தொற்றில் ஆரஞ்சில் இருந்து பச்சைக்கு மாறிய ஈரோடு மாவட்டம்!



கடந்த 22 நாட்களில் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படாததாலும், இதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்தவர்கள் அனைவரும் நலம் பெற்று வீடு திரும்பியதால் தற்போது ஈரோடு மாவட்டம் பச்சை நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ஈரோட்டில் சுற்றுலாவிற்கு அதிகளவில்  வந்தவர்களால். ஈரோடு மாவட்டம் அதிக அளவில் கொரோனா தொற்றினால் பாதிப்பு அடைந்தது.  இதனால் 10 மாத குழந்தை, பெண்கள் என 70 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

தற்போது அவர்களில் பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில், மற்ற அனைவரும் நலம் பெற்று அனைவரும்  வீடு திரும்பினர்.  இப்போது ஈரோடு மாவட்டம் முழுவதும் 15க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய் தடுப்பு  முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 22 நாட்களில் ஒருவருக்கு கூட நோய் பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என்பது மிகவும் வரவேற்கத்தக்க செய்தியாகும்.

 இதன் காரணமாக ஆரஞ்ச் மண்டலமாக இருந்த ஈரோடு மாவட்டம்  தற்போது பச்சை மண்டலமாக மாறி கொரோனா தொற்றில் இருந்து முன்னேற்றமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பச்சை மண்டலமாக மாறியத்திற்கு மக்களின் முழு ஒத்துழைப்பும் தான் காரணம் என்று மருத்துவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,







எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?



Post a Comment

0 Comments