இது என்னடா குடைக்கு வந்த சோதனை?



தமிழகத்தில் வரும் 7-ம் தேதி முதல் மது கடைகளை திறக்கப்படும் அரசு அறிவித்த நிலையில் திருப்பூரில் உள்ள மதுக்கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கண்டிபாக குடைபிடித்து கொண்டு தான்  மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டுமென அம்மாவட்டத்தின்  நிர்வாகம்  சார்பில்  அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டு இருக்கும் நிலையில், தமிழ் நாட்டின் அண்டை மாநிலங்களில் மது கடைகள் திறப்பதினால் தமிழகத்திலும் 7-ம் தேதி முதல் மது கடைகளை திறக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.


பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வரும் சூழ்நிலையில், தமிழக அரசு வரும் 7-ம் தேதி மது கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது. மேலும், பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தமிழகத்தில் ஏழாம் தேதி முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு  சார்பில் கூறியுள்ளனர்.


குறிப்பாக மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்  என்பதற்காக பல பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மது வாங்க வருபவர்கள் கண்டிபாக  குடையுடன் வந்து குடை பிடித்து வரிசையில் நின்று மதுபானங்களை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 


குடையுடன் வந்தால் மட்டும் தான் மது வழங்கப்படும் என்றும் வராதவர்களுக்கு மதுபானம் வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலுக்காவும், சமூக இடைவெளிகாவும் குடை எடுத்துட்டு போனா கூடா!! நம்மள மது பிரியர் என்று தானாடா இந்த சமூகம் நம்மள பார்க்கும்!!! என்ன கொடுமை சரவணன் இது!!! என்று புலம்பும் பொதுமக்கள்


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




எதற்காக நாம் முகக்கவசம் அணிய வேண்டும்?





Post a Comment

0 Comments