குறிஞ்சியின் காலை பொழுது!!



           செங்கதிரவன் மெல்ல மெல்ல தோகையை விரிக்க. தொட்டாசிணுங்கி போன்ற செங்கதிர் பட்டத்தும் வண்ண விண்மீன்ங்களும், வெண்ணிற ஆடை உடுத்திய வெண்ணிலாயும் மறைய கண்டேன். மலையும் மலையும் சார்ந்த குறிஞ்சி மலையின் இடையில் பூத்த செந்தாமரை போன்று கதிரவன் மலர்ந்து தன் தோகையை விரிக்கின்றான் ஆதவன். மலையின் இடையில் உள்ள புற்களியின் மீது உள்ள தென்றலாய் படர்ந்து இருக்கும் முத்துப் போன்ற பனிதுளிகள் தேன் போல் உருகுக்கின்றது. இரவு முழுவதும் மித்திரை கொண்ட வன சாமரங்களும், செடிகள் மலைப்போன்று படந்து இருக்கும் கொடிகளும் புத்தூயிர் பெற்றத்து போல் பச்சை உடை உடுத்தி சிரித்து காட்சி அளிக்கின்றது.

 

                   வண்ண மிக்க மலர்களும், பூக்களை கண்ட தேனீக்கள் போல் சூரியனை கண்ட ஆம்பல்,செங்காந்தள் போன்ற மலர்கள் பூத்து குலுங்கின. வளர்ந்து நெலிந்த உயர்ந்த தென்னை மரமே உன் கீற்றுகளில் கீர்த்தனைகளை பாடுவது யாரோ?? அதிகாலை பொழுதின் தென்றொலொடு மண்வாசனை கொணட குறிஞ்சி நிலமேஉன் முப்பொழுதும் தென்றல் என்னும் கவிதை  மட்டுமா???? மழையில் ஆடும் மான்க்குட்டி மெல்ல மெல்ல குதித்து குதித்து ஒடினரகு குலநாதன் என் ராமன் தொட்ட அணில் செம்கனிக்களையே பூசிக்கின்றன.


செல்ல பட்டு போன்ற முயல்க்குட்டிகள் காய்களையும்,கனிகளையும் கொத்தி கொரிக்கின்றது. குற்றால அருவிகள் பூங்காற்றைப் போல்  நீரின் அலைகள் மேல் இருந்து கீழாக பாறைகளில் விழிக்கின்றன. எந்த பாறை வந்தலும் துணிவுடன் மொதுக்கின்றது அருவி……. அருங்காட்சி போன்று காட்சி அளிக்கின்றது.

 

காலைப்பொழுதில் தெரியும் வெண்ணிலாப் போன்ற வண்ணப்பறவைகள் வட்டம் இட்டு பறக்கின்றன. சிட்டுக்குருவிகள் சிறகுகளை சிலுக்கின்றன. எந்த ஆசிரியர் இடம் பயின்றதோசரணங்களில் சட்கப்போடு போடுக்கிறது.பூக்களை தேடும்  வண்ணப்பட்டாம் பூச்சும்,தேனீக்களும் பல்லாங்குழி ஆடுக்கின்றது .மழை கண்ட மயில் போல் குறிஞ்சியின் காலை பொழுது நடனம் ஆடுக்கின்றன. குறிஞ்சி மலையில் என் மாதங்களை கழிக்க  மனம் ஆசைப்படுகின்றது.. காரணம் என்னவோ.. எண்ணியது யாவும் கிடைக்க வேண்டும். குறிஞ்சியின் என் மனம் இலக்கணம் தொலைந்தது. பச்சை நிற ஆடையாக  மாற மனம் துடிக்கின்றன. மயில் போல் ஆட என் காலில் சலங்கை கட்டியது யாரோ??? யாதும் ஊரே யாவரும் கேளிர்……..என் மனம் அலைப்பாயுதெ குறிஞ்சியின் காலைப் பொழிதில்….

                                                                       - இப்படிக்கு செங்காந்தள்

இது போன்ற கவிதைகளை படிக்க!


மூன்றாம் பிறையுடன் ஒரு சின்ன காதல்!!










Post a Comment

0 Comments