தேசிய கீதம் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிவை!





        ந்திய அரசியலமைப்பு குழு 1950 ஜனவரி 24-இல் ’ஜன கண மன’ பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது. இது தாகூர் வங்காள மொழியில் எழுதி இந்தியில் மொழி பெயர்க்க செய்யப்பட்டது. 

  • இது முதன் முதலில் தாகூரினால் தத்துவ போதினி பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

  • இரவீந்திரநாத் தாகூரால் 1919 –ல் மொழிபெயர்க்கப்பட்டது.

  • இது முதன் முதலில் வங்காளம்  மொழியில் இயற்றப்பட்டது


  • 1911 டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக பட்டது.


  • மாநாட்டின் இரண்டாம் தினம் முதல் நாளிலேயே ’வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது.


  • தேசிய கீதம் 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.


  • 1912-யில் தத்துவ போதினி பத்திரிக்கையில் பாரத விதாதா எனும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.


  • 1919இல்  “The morning song of India” எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.


  • ஜனகனமன” இசை அமைத்தவர் காப்டன் ராம் சிங் டாக்கூர்.


  • ஜனகணமன” அமைந்துள்ள ராகம் சங்கரபரணம்.


  • 5 பத்திகள் 13 வரிகள் கொண்ட நமது தேசிய கீதத்தை 52 நொடிகளில் பாடவேண்டும்.


  •  முதல் கடைசி பத்தியை மட்டும் கொண்ட தேசிய கீதத்தின் குறுகிய வடிவத்தை பாடுவதற்கான நேரம் 20 நொடி.


  • தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப் பண்’  என்கிறோம்.



  • தேசிய கீதத்தில் குறிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் பஞ்சாபின் ஒரு பகுதியும் சிந்து மாநிலம் முழுவதும் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது.


தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள மாநிலங்கள்:




  • பஞ்சாபின் ஒரு பகுதியும், சிந்துவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளது.
  • குஜராத், மராட்டியம், திராவிடம் ( தென்னிந்திய மாநிலங்களின் பொதுபெயர்) உத்கல்  (ஒடிசா) வங்காளம் ஆகிய மாநிலங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
  •  தேசிய கீதம் மாநிலங்கள்   ’திராவிடம் என்பது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்கள் திராவிடம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. 
  • உத்கல்   என்ற வார்த்தை ஒடிசாவைக் குறிக்கிறது. 

தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள ஆறுகள்:

  • கங்கை 
  • யமுனை



தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள மலைகள்:


  • விந்திய மலை
  • இமயமலை


தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள முதல் மாநிலம்:


  • பஞ்சாப்

தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள கடைசி மாநிலம்:


  • வங்காளம்


இது போன்ற சுவாரசியமான தகவலை காண,




Post a Comment

1 Comments