வெங்காயம் இந்தியா, ஈரான்
மற்றும் பாகிஸ்தான்
போன்ற நாடுகளில் அதிக அளவில் உணவில்
சேர்த்து கொள்ளப்படுகிறது. வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில்
4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளது.
வெங்காயத்தில்
பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை பச்சையாக
தினமும் வெறும்
வயிற்றில் சாப்பிடுவதால் பல்வேறு
நம்மைகள் நமது
உடலுக்கு உண்டு.
வெங்கயாத்தின் நன்மைகள்:
பெரும்பாலும்
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை
முழுமையாகப் பெற முடியும்.
- சாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடனே குணம் அடையும் .
- தேள், குளவி போன்ற விஷ ஜந்துகள் கடித்த இடத்தில் வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அழுத்தித் தேய்த்தால் வலி குறையும்.
- மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிது.
- வெங்காயத்திலுள்ள கந்தகச் சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.
- வெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.
- வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.
- பற்களில், குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபடை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
மேலும், இது போன்ற அறிவியல் தகவலை காண,
1 Comments