எதிர்ப்பு சக்தி நிறைந்த சுவையான மொச்சை சாம்பார் செய்வது எப்படி?

 


காரக்குழம்பில் பல வகைகள் இருகின்றது. குறிப்பாக எதிர்ப்பு சக்தி மிகுந்த சுவையான மொச்சை சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றிதான் பார்க்க போகிறோம்.


மொச்சை சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

 

  1. மொச்சை – தேவையான அளவு
  2. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
  3. தேங்காய்த் துருவல் - சிறிய கப்
  4. கடுகு, வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி
  5. தனியா - ஒரு தேக்கரண்டி
  6. கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
  7. காய்ந்த மிளகாய்
  8. துவரம்பருப்பு - 100 கிராம்
  9. புளிஎலுமிச்சைப் பழ அளவு
  10. கறிவேப்பிலை
  11. பெருங்காயத்தூள்தேவையான அளவு  
  12. எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை:

சமையல் செய்வதற்கு முன்பு மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். பின்னர், துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். அதன் பின் தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

புளியைக் கரைத்து வாணலியில் ஊற்றி சாம்பார் பொடி, உப்பு, வேகவைத்த மொச்சை சேர்த்து  நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த  விழுது சேர்த்து நன்கு கலந்து, மேலும் கொதிக்கவிடவும்.பின்னர் தாளிக்க  சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும். அதற்கு மேல்,கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலக்கவும். இப்போது மணக்கும் சுவையான மொச்சை சாம்பார் ரெடி. வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறுங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிச்சு சாப்பிடுவார்கள். மொச்சை எதிர்ப்பு சக்தி மிகுந்த பொருளாகும்.


மேலும்இது போன்ற தகவலை காண,

பூண்டு சூப் செய்யும் முறை

பச்சையாக வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?



Post a Comment

0 Comments