தலைக்கு மட்டும் எண்ணெய் வைத்து குளிப்பதால் எந்த நன்மையும் இல்லை!





       ம்மில் சிலர் தலைக்கும் மட்டும் எண்ணெய்  வைத்து குளிப்பார். அப்படி தலைக்கு மட்டும் எண்ணெய் தேய்த்து குளிப்பது பெரும் தவறாகும். பாதம் துவங்கி தலைவரை கீழிருந்து தேய்த்து குளிப்பது சிறப்பாகும். எண்ணெய் கீழிருந்து மேல்நோக்கி தேய்த்து உரவைத்து குளிப்பதே சிறப்பாகும். குறைந்தபட்சம் பாதம் துவங்கி தோள்பட்டை வரை தடவி ஊறவைத்து குளிக்கலாம்.

அப்படி குளித்தால் என்ன நிகழும்?

  • தலைக்கு மட்டும் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலிலுள்ள கழிவெப்பம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளாகவே கழிநீராக தேங்கிடும். சூடான பாத்திரத்தில் தட்டில் படிந்திருக்கும் நீர்த்திவளைகள் போல.


  • இப்படி குளிப்பதினால் கோழைக்கட்டு, சுவாசபாதிப்புகள், காது மந்தம், தலைபாரம், தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.


  • உடல் புத்துணர்வின்றி சோர்வுற்றிருக்கும்.


  • எண்ணெய் குளியலெடுத்த நிறைவென்பது துளியுமின்றி அசதிகள் மட்டுமே மிஞ்சும்.


  • இதுபோன்ற அறிகுறிகளால் தான் இக்கால தலைமுறையினருக்கு எண்ணெய் குளியல் என்பது ஏட்டுச்சுரைக்காயாகிவிட்டது.


  • அறிந்தோரும் தவறான முறை குளியலால் ஏற்படும் அழற்சிகளை கண்டு தங்களின் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என உடலின்மீது பழியேற்றிவிட்டு.


  • அறியாமையில் கோழைபோல இயற்கை குளியலை ஒதுக்கிவிட்டதால் கோழையுடனும் உடற்சூட்டுடனும் அலைகின்றனர்


  • குளியல் என்பது அழுக்கு தேய்த்து குளிப்பதல்ல. உடலின் வெப்பக்கழிவுகளை நீக்கி உடலை குளிர்விக்கும் முறையே என்பதை உணர்ந்து.

  • உடல் குளிரக்குளிர குளித்தால் உடல் குளிர்ந்து உறுதியடைவதுடன். நோய்நொடியின்றி நெடுநீண்டகாலம் நலநிறைவுடன் வாழலாம்.



மேலும் இது போன்ற தகவல்களை காண,








Post a Comment

0 Comments